Friday, March 10, 2017

நிலக்கடலையும் அதன் பயன்களும்

முனைவர் க. அசோக்குமார்
உதவிப் பேராசிரியர்
வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403.


அறிமுகம்:
நிலக்கடலை அல்லது வேர்க்கடலை (Peanut or Groundnut) என்பது பலரால் விரும்பி
உண்ணப்படும் பருப்பு வகை  தாவரம் ஆகும். ஃபேபேசியே குடும்பத்தை சேர்ந்த
நிலக்கடலையின் தாவரவியல் பெயரானது அராக்கிஸ் ஹைப்போஜியா ஆகும். 
நிலக்கடலையின் சிறப்பியல்பானது, இப்பயிரின் விளை பொருள் மண்ணிற்கடியில் 
விளையக்கூடியதாகும். எனவே இப்பயிர் ன்றாக வளர்வதற்கு மனற் பாங்கான நிலம் 
மிகவும் உகந்ததாகும். பிரேசிலை பூர்வீகமாக கொண்ட நிலக்கடலையானது சீனா,  
இந்தியா, நைஜீரியா, அமெரிக்கா மற்றும் சூடான் ஆகிய நாடுகளில் அதிகமாக உற்பத்தி 
செய்கின்றன. இந்தியாவில் இப்பயிர் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மத்திய
பிரதேசம், உத்திரபிரதேசம், மற்றும் குஜராத் மாநிலங்களில் அதிக அளவில் 
பயிரப்படுவதோடு மட்டுமில்லாமல் தாவர எண்ணையை (Vegetable oil) உற்பத்தி 
செய்வதில் முதலிடம் வகிக்கிறது.
 


ஊட்டச்சத்துக்கள்:
100 கிராம் உலர்ந்த நிலக்கடலையில் உள்ள ஊட்டச்சத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் மூலம் தெரிந்து கொள்வோம்.


சத்துக்கள் (Nutrients)
செறிவின் அளவு (Concentration)
அமெரிக்க பரிந்துரையின் படி தோராயமாக பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு  தேவையான சத்துக்களில் பங்களிப்பு (சதவீதத்தில்)
 ஆற்றல்
2390 கிலோஜூல்
(570 கிலோகலோரி)
-
மாவுப்பொருள் (Carbohydrate)
21 கிராம்
-
- சர்க்கரை 
0.0 கிராம்
-
- நார்ப்பொருள் (உணவு) 
9    கிராம்
-
கொழுப்பு (Fat)
48  கிராம்
-
-நிறைவுற்ற கொழுப்பு  (Saturated)
7  கிராம்
-
-ஒற்றைநிறைவுறாகொழுப்பு (Monounsaturated)
24 கிராம்
-
-பல்நிறைவுறா கொழுப்பு (Polyunsaturated)
16 கிராம்
-
புரதம் (Protein)
25 கிராம்
-
உயிர்ச்சத்துக்கள் (Vitamins)


தயமின் (பி1)
0.6 மில்லிகிராம்
46%
ரிபோஃபிளாவின் (பி2)
0.3 மில்லிகிராம்
20%
நியாசின் (பி3)
12.9 மில்லிகிராம்
86%
பான்டோதெனிக் அமிலம் (பி5)
1.8 மில்லிகிராம்
36%
உயிர்ச்சத்து பி6
0.3 மில்லிகிராம்
23%
போலிக்அமிலம்/போலேட்(பி9)
246 மைக்ரோ கிராம்
62%
உயிர்ச்சத்து
6.6 மில்லிகிராம்
44%
கனிமங்கள் (Minerals)


கால்சியம்
62 மில்லிகிராம்
6%
இரும்பு
2 மில்லிகிராம்
16%
மக்னீசியம்
184 மில்லிகிராம்
50%
பாஸ்பரசு 
336 மில்லிகிராம்
48%
பொட்டாசியம்
332 மில்லிகிராம்
7%
துத்தநாகம் (ஜிங்க்)
3.3 மில்லிகிராம்
33%
                ஆதாரம்: https://ndb.nal.usda.gov/ndb/foods/show/4831
நிலக்கடலை எண்ணெய்: 
நிலக்கடலை கடலை எண்ணெயில் 46% நிறைவுறா கொழுப்புகள் (முதன்மையாக ஒலீயிக் அமிலம்), 32% பல்நிறைவுறா கொழுப்புகள் (முதன்மையாக லினோலெயிக் அமிலம்), மற்றும் 17% நிறைவுற்ற கொழுப்புகள் (முதன்மையாக பால்மிட்டிக் அமிலம்) உள்ளன.
நீர் மற்றும் மைய விலக்கல் முறையை(Centrifugation method)   பயன்படுத்தி நிலக்கடலையிலிருந்து பெறப்பட்ட எண்ணெயினை எதிர்காலத்தில் நீண்ட கால மனித விண்வெளி பயணங்களுக்கு பயன்படுத்த அமெரிக்க விண்வெளி ஆய்வுமையமான நாசா (NASA) பரிசீலனை செய்துவருகிறது.

பயன்கள்:
 • நிலக்கடலையை பச்சையாகவோ, அவித்தோ அல்லது வறுத்தோ உண்ணப்படுகிறது.
 • நிலக்கடலையுடன் வெள்ளம் சேர்த்து கடலை மிட்டாய் தயாரிக்கப்படுகிறது.
 • நிலக்கடலை எண்ணெய்  பொதுவாக சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது.
 • கடலை புண்ணாக்கில் (Groundnut cake)  லைசின் மற்றும் குளூட்டமைன் போன்ற அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளதோடு நார்ச் சத்து, கச்சா புரதம், மற்றும் கொழுப்பும் நிறைந்துள்ளது. எனவே கடலை புண்ணாக்கு மாடுகளுக்கு சிறந்த தீவனமாக பயன்படுகிறது.
 • கடலை புண்ணாக்கு உரமாக பயன்படுத்தப்படுகிறது.
 • நிலக்கடலையில் உள்ள புரதத்திலிருந்து அர்டில் (Ardil) என்ற செயற்கை இழை (Synthetic fibre) தயாரிக்கப்படுகிறது.
 • வேர்க்கடலையை அரைத்து வேர்க்கடலை வெண்ணெய் (Peanut butter) தயாரித்து பயன்படுத்தப்படுகிறது.
 • வேர்கடலையின் எண்ணெயிலிருந்து பெயிண்ட், வார்னிஷ், உயவு எண்ணெய் (Lubricant) பூச்சிக்கொல்லிகள், நைட்ரோகிளிசரின் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
 • நிலக்கடலையில் மாங்கனீசு சத்து அதிகமாக உள்ளதால் நாம் உண்ணும் உணவில் உள்ள கால்சியம் சத்துகள் நமது உடலுக்கு கிடைக்க இது பயன்படுகிறது.
 • நிலக்கடலையின் தோலில் ரெஸ்வரெட்ரால் உள்ளதென சமீபத்திய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இது இதய நோய்கள் வராமல் தடுக்கவல்லது என குறிப்பிடத்தக்கது.
 • ஹைட்ரஜனேற்றிய எண்ணெய் (Hydrogenated oil) ஆனது வனஸ்பதி/ தாவர நெய் (Vegetable ghee) தயாரிக்கப் பயன்படுகிறது.
 • நிலக்கடலையில் உள்ள தாமிரம் (Copper) மற்றும் துத்தநாக (Zinc) சத்தானது தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகரிக்கிறது. மேலும், நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானாது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
 • நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை சீராகச் செயல்படுவதுடன் கர்ப்பப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படாது. அது மட்டுமல்லாது குழந்தைப்பேறும் சிரமமின்றி உண்டாகும். நிலக்கடலையில் அதிகமாக உள்ள "போலிக் அமிலம்” (Folic acid) இனப்பெருக்கத்திற்கு உதவுகிறது. உதாரணமாக, நமது ஊரில் நிலக்கடலை பயிரிடப்பட்டிருக்கும் வயலில், காய் பிடிக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால், நிலக்கடலை காய் பிடிக்கும் பருவத்திற்குப் பிறகு எலிகள் அதிகமாக குட்டி போடுவதைக் காணலாம்.
மனித வாழ்விற்கு அத்தியாவசமான ஊட்டச்சத்துக்கள் மிகுந்துள்ள,  பல்வேறு பயனுள்ள நிலக்கடலையை நாமும் சாப்பிட்டு பயன்பெறுவதோடு மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கும் நிலக்கடலையின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி அவர்களையும் பயன்படவைப்போமே!


3 comments:

 1. This is a great post,as always like to learn for mobile development.I’am so enjoying this blog.You are the best writer!
  NetCab | election news 2019 | election news 2019 | tamil news live youtube | politics speech tamil

  ReplyDelete
 2. You become a Guide for me. You always change my Way of thinking . your way thinking is Really amazing.
  latest news in tamil | latest news in sunnews | sunnews live youtube | jayaplus live youtube | politics speech tamil | NetCab

  ReplyDelete

நிலக்கடலையும் அதன் பயன்களும்

முனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...