Thursday, July 28, 2011

நீரிழிவு நோயை (Diabetes) குணப்படுத்துவதில் இனிப்பு துளசியின் (Stevia) முக்கியத்துவம்

அறிமுகம்:
ஸ்டிவியா (Stevia) என்று ஆங்கிலத்தில்  அழைக்கப்படும்  மூலிகை பயிரானது தமிழில் இனிப்பு துளசி () சீனித்துளசி என்றழைக்கப்படுகிறது. பராகுவே நாட்டை தாயகமாக கொண்டுள்ள இப்பயிரானது ஜப்பான், கொரியா, சீனா, பிரேசில், கனடா மற்றும் தாய்லாந்தில்  அறிமுகப்படுத்தப்பட்டு பயிரப்படுகிறது.  மேலும் இப்பயிர் இந்தியாவில் மகராஷ்டிரா மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்க்கப்படுகிறது. 

இனிப்பு துளசியின் முக்கியத்துவம்:
மனிதனின் தினசரி உனவு முறைகளில் சர்க்கரையானது முக்கிய பொருளாக பயன்படுத்தப் பட்டு வருகிறது. நாம்பெரும்பாலும் பயன்படுத்தும் சர்கரையானது கரும்பில் இருந்து பிரித்தெடுக்கப் பட்டதே ஆகும். கரும்புச்சர்கரையானது அதிகமான கலோரிகளை கொண்டுள்ளதால் சர்ககரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கரும்பு சர்கரையை பயன்படுத்த முடியாமல் உள்ளனர்.  தற்போது இவர்கள் கரும்பு சர்கரைக்கு பதிலாக இனிப்பு துளசியிலிருந்து பெறப்பட்ட சர்க்கரையை  பயன்படுத்தலாம். ஏனெனில் இனிப்பு துளசியிலிருந்து பெறப்பட்ட சர்க்கரை கலோரிகளை உருவாக்குவதில்லை. ஆகவே இதனை கரும்பு சர்க்கரைக்கு பதிலாகவும், மற்றும் செயற்கை இனிப்பூட்டிகளான சாக்கரின், அஸ்பார்டேன் ஆகியவற்றிற்கு மாற்றுப் பொருளாக பயன்படுத்தலாம்.

இனிப்பு துளசியில் உள்ள வேதிப்பொருள்கள்:
இனிப்புத்துளசியின் இலைகளில் உள்ள ஸ்டீவியோசைடு (Stevioside ) மற்றும் ரெபடையோசைடு (Rebaudioside) எனும் வேதிப்பொருள்களே இனிப்புத்தன்மைக்கு முக்கிய காரணமாகும். இனிப்புத்துளசியின் இலைகள் கொண்டுள்ள இனிப்பின் அளவை  கரும்பு சர்கரையோடு ஒப்பிட்டு பார்த்தால் கரும்பை விட 30 மடங்கு அதிக இனிப்பு கொண்டுள்ளது. மேலும் ஸ்டிவியோசைடில் உள்ள இனிப்பின் அளவு சர்கரையை விட 200-300 மடங்கு அதிகமாக உள்ளது. இனிப்பு துளசியின் உலராத இலைகளில் (Fresh leaves) 15-20 சதவிகிதம் என்ற அளவில் ஸ்டிவியோசைடு என்ற வேதிப்பொருள் காணப்படுகிறது. மேலும் உலர் இலைகளில் (Dried leaves) ரெபடையோசைடு – ஏ (Rebaudioside-A)  2-4 சதவிகிதமும் உள்ளது. மேலும் கார்போஹைட்ரேட், சோடியம், மெக்னிசியம், கால்சியம்,  பாஸ்பரஸ், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்களும் குறிப்பிட்ட அளவு உள்ளது.

இனிப்பு துளசியை இனிப்பூட்டியாக (Sweetener) பயன்படுத்துவதால் வரும் நன்மைகள்:
1.இரத்த அழுத்தத்தம் (Blood pressure) மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் (Blood sugar) அளவை அதிகரிக்க செய்வதில்லை.
2.இனிப்பு துளசியானது கலோரிகளை உருவாக்குவதில்லை (0 Calories) மற்றும் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பதில்லை.
3.ஸ்டிவியா நுண்ணுயிரிகளை எதிர்க்கும் திறன் பெற்றுள்ளது.
4.சர்க்கரை நோயாளிகள்  இனிப்பு துளசியின் பொடியை  டீ, காபி போன்ற குளிர் பானங்கள், ஐஸ்கிரிம், சாக்கலேட், இனிப்புகள், பிஸ்கட், பாயாசம் மற்றும் பழச்சாறு போன்றவற்றில் சர்கரைக்கு பதில் பயன்படுத்தி உண்டு மகிழலாம்.
5.இதை பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் இல்லை.தற்போது மருந்து கடைகளில் இனிப்பு துளசி (ஸ்டிவியா) ஆனது பல்வேறு பெயர்களில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே பயன்படுத்துமுன் தகுந்த மருத்துவர் ஆலோசனைக்கு பின் பயன்படுத்தி மகிழுங்கள்.


குறிப்பு: நண்பர்களே.. நீரிழிவு நோயை பற்றி நன்கு அறிய வேண்டுமெனில் எனது முந்தைய பதிவை பார்க்கவும். மேலும் இந்த பதிவை நன்கு மேம்படுத்தி எழுத உதவிய முனைவர் ப. சிவக்குமார் அவர்களுக்கு மிக்க‌ நன்றி.
அறிவியல் வழியே தமிழ் வளர்ப்போம்! அன்னை மொழியை அழிவிலிருந்து மீட்போம்!


28 comments:

 1. naam thamilar samaran BALAAugust 2, 2012 at 10:40 AM

  நம்ம ஊரில வளருமா?

  ReplyDelete
 2. Really good blog. Wonderful information.

  Can you please review and post a comment on my blog too?

  http://wellness-and-wealth.blogspot.in

  ReplyDelete
 3. இதை தமிழ்நாட்டில் பயிர் செய்ய இந்த செடி / விதை எங்கு வாங்க வேண்டும்.
  எதற்கு எந்த மாதிரி நிலம் தேவை.

  ReplyDelete
  Replies
  1. You can get stevia plants from Botanical garden in Tamil Nadu Agri university, Coimbatore, Botanical garden- Ooty.

   Delete
  2. seenithulasiblogspot.in /7200121206

   Delete
  3. Mr.Ashokkumar sir, i just want to cultivate stevia in my land. can you please let me know the importers of stevia in canada.

   Delete
  4. You may please get Stevia saplings from us 9790255662 / 8870064344

   Delete
 4. ஊக்கத்திற்கு நன்றி நன்பர்களே..

  ReplyDelete
 5. Dear Sri Ashokkumar,
  Thank you for the wonderful articles. You have collected so much of information and sharing it.
  Any idea about the Mahalakshmi Plant ? The leaf of the plant is used to light lamp and is supposed to ward of negative influence from the home. I got the plant from a temple at Morathaandi, near Pondichery and it has taken root. If it would help, I can send a picture of the plant.
  Best Wishes
  Gopikrishna

  ReplyDelete
  Replies
  1. Dear Mr.Gopikrishna
   Wt is mahalakshmi plants. wt is the use of tat plants. wheatehr it will grow normal condtion.
   jaganivasan
   Plant tissue culture
   9865210255

   Delete
  2. You may please get பேய் மிரட்டி-Pai mirratti-Anisomeles malabarica saplings or even seeds from us 9790255662 / 8870064344 . Thanks

   Delete
 6. Nice article... I have to search for this in agri university when I go too native next time and try out more recipes using this to benefit diabetic people. Please do visit my blog of cooking www.cookingcrest.blogspot.com

  ReplyDelete
 7. hi ashokkumar,
  Nice article got several unknown details from ur article. i searched abt stevia plants for my mom who is having type 2 diabetes more than 9 years.Using human Mixtrad 30/70 mrng and night 25 and 20 units respectively. now she is taking sugar free in her tea. i heard abt this plant in my university through a senior staff. so i want to replace the sugar free with stevia.. whether it may give any adverse impact for her..? pls provide ur valuable comments

  ReplyDelete
 8. Replies
  1. You may please get Stevia saplings from us 9790255662 / 8870064344. Balamurugan C

   Delete
 9. Where it is cultivated in tamilnadu

  ReplyDelete
  Replies
  1. It's cultivated in Our City Trichy. You may please get Stevia saplings from us 9790255662 / 8870064344. Balamurugan C

   Delete
 10. https://www.indiamart.com/nalamfoods/cooking-spices.html sells stevia raw powder

  ReplyDelete
 11. im suffering with brain stroke( Pakkavatham) left hemiplegia Since one year my left hand and lefi leg has been disabled. since one year please guide me for recovery.. my details below...
  Name: Saravanan.
  Age: 32
  Place: Hosur(tamilnadu)
  My whatsapp contact: 9500964277

  ReplyDelete
 12. Thanks for posting this blog on health tips. The information provided was very useful for me. The best cardiologist in Chennai offers the best treatment for all their patients. They have been serving the people for the past two decades. They diagnose your disease and then provide treatment accordingly.

  ReplyDelete

நிலக்கடலையும் அதன் பயன்களும்

முனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...