Wednesday, September 14, 2011

மனிதனும் உலக வெப்பமயமாதலும்


காடுகளை அழித்து
கட்டடங்களை கட்டியதினால்
பருவமழை பொய்த்து போனது
விவசாய விளை நிலங்களை
வீட்டு மனைகளாக உருமாற்றினோம்.

இயற்கை விவசாயத்தை முழுவதுமாக அழித்து
செயற்கை விவசாயத்தில்
உரம், பூச்சிக்கொள்ளி மருந்துகளை தெளித்து
மண்ணையும் மலடாக்கினோம்.

பண்டிகை காலங்களில் பட்டாசு வெடித்து
சுற்றுச் சூழலை மாசுபடுத்தினோம்
கடவுள் சிலைகளை கடலில் கரைத்து
கடலையும் மாசுபடுத்தினோம்.

எரிபொருட்களின் அதிகபட்ச பயன்பாட்டினால்
காற்றினை மாசுபடுத்தி
வளிமண்டலத்தை வெப்பமடைய செய்தோம்
ஓசோனில் ஓட்டையை போட்டோம்
பனிமலைகளை உருகச்செய்தோம்
உலக வெப்பமயமாதலுக்கு நாமே  காரணமானோம்.

மரங்களை நட்டோமா?
பாலீதீன் பைகளை தவிர்த்தோமா?
மின்சாரம்,எரிபொருளின் உபயோகத்தை குறைத்தோமா?
பின், உலகம் வெப்பமயமாகமல் இருக்குமா?

7 comments:

  1. அருமையான சொல்லாடல்..

    ReplyDelete
  2. கருத்துகளுக்கு நன்றி நண்பர்களே..

    ReplyDelete
  3. தங்களின் வலைப்பூ மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. யாரும் கேட்க மாட்டார்கள். ஓரளவு கல்வியறிவு உள்ள மக்களே கவலைப்படாத போது, படிக்காதவர்கள் அதிகமாக இருக்கும் நம் நாட்டு மக்களையெல்லாம் மாற்றுவது ரொம்ப கடினம். விழிப்புண்ர்வுள்ள பதிவு நண்பா

    ReplyDelete
  5. Naam idhai patri ellam kavalai pada vendiyadhillai. enendral ulagam maru suzharchi murayil mothamaga azhindhu marupadiyum uruvagum. Pudhu uyilrgal thondri marupadiyum manidhan pondra nagarigangal thondrum. Enendral idhai seer seiyum nilayai naam thandi vittom. Indha pudhumayana, eri porulum, minsaramum illadha vazhkkayai, ippodhu ulla nagar purathil, en gramathil kooda vazha mudiyadhu. Padippu, varthagam, poruladharam pondra varthaigalal manidhan iyarkayai vittu vilagi vittan. Innum solla ponal, munnetram & vazhkkayil settle adhal pondra varthaigalum thevayillai. ovvuruvanum munneruvadhal ulam dhan azhigiradhu. munneravillayendral avan azhigindran.

    ReplyDelete

நிலக்கடலையும் அதன் பயன்களும்

முனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...