Tuesday, August 9, 2011

மழை - (சிறுகதை)கண்டியங்கொல்லை என்ற அழகிய கிராமம். அங்கு ராசய்யா என்ற பெரியவர் வாழ்ந்து வந்தார் அவருக்கு வயது 60 வதை தாண்டினாலும் தன்னிடமிருந்த கால் ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். அவருடைய மகனும் மருமகளும் பேருந்து விபத்தில் இறந்து விட பேரனை தானே வளர்த்து வந்தார்.

ராசய்யா பெரியவரின்  பேரன் குமார் அவ்வூர் அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தான். அன்று காலையில், ஏலே குமாரு பள்ளிகூடத்திற்கு கிளம்புடா மணி ஒன்பது ஆயிட்டுதுடா என்றார் அதட்டியவாரே. இதோ கிளம்பிட்டேன் தாத்தா என்று கூறிக்கொண்டே மஞ்சள் பையை தோலில் மாட்டிக்கொண்டு ஓடினான் பள்ளிக்கு.

ராசய்யாவிற்கு மனதில் ஆசை இந்த வருடமாவது பேரனுக்கு புது துணி எடுத்து தரணும் என்று. ஆனால் என்ன பண்ணுவது போன வருடம் மழை பெய்யாமல் ஏமாற்றி விட்டதால்  இருந்த  கால் ஏக்கர் நிலமும்  பயிரிடாமல் தரிசாய் கிடந்தது. இந்த வருடமாவது சரியான நேரத்தில் மழைபெய்தால் வயலில் நெல் விதைத்து பேரனுக்கு புது துணி எடுத்து தரலாம் என்று மனசுக்குள்ளே நினைத்தார்.

நெல் விதைப்பிற்கான பருவருமும் நெருங்கியது. அவர் எதிர்பார்த்த மாதிரியே அன்று ஒருநாள் வானத்தில் மேகம் கருத்தது. வானத்தை தலையை தூக்கியவாறே பார்த்தார் அந்த பெரியவர். வானத்தில் கருமேகம் தரையை தொட்டுக்கொண்டு இருந்தது. அவர் முகத்தில் அளவில்லாத மகிழ்ச்சி இன்று மழை கண்டிப்பாக பெய்யும் என்று நினைத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றார். அன்றிரவு நல்ல மழை பெய்தது.

மறுநாள் ஞாயிற்று கிழமை ஆனதால் பேரனையும் அழைத்துக்கொண்டு தோளில் ஏர் கலப்பையை சுமந்து கொண்டு, ஒரு கையில் ஒரு ஜோடி காளை மாடுகளை ஓட்டிச்சென்றார் அவருடைய வயலுக்கு. எரு இட்டு  நிலத்தை நன்கு உழுது பின்பு நெல்லை மானாவாரியாக விதைத்துவிட்டு வீட்டிற்கு சென்றார்.

அன்றொரு நாள் வீட்டில் குமார் தாத்தாவிடம்,  தாத்தா இந்த வருடமாவது எனக்கு புது சட்டை வாங்கி தா என்னுடைய கால்சட்டையில பின்னாடி ஓட்டை இருக்கிறதால என்னோடு படிக்கும் பசங்கயெல்லாம் காகிதத்தை (பேப்பரை) மடித்து  தபால் பெட்டி மாதிரி தபால் போட்டு சிரிக்கிறாங்க‌ என்றான் அழுதபடியே. 

சரிடா பேராண்டி இன்னும் 2 வாரத்தில் உனக்கு புது துணி எடுத்து தரேண்டா வயல்ல நெல் அறுவடைக்கு வந்துகிட்டு இருக்கு அறுவடை முடிந்ததும் நெல்லை விற்று உனக்கு புது துணி வாங்கி தருவதுதான் எனக்கு முதல் வேலை என்றார். அப்படியா! தாத்தா என்று தாத்தாவின் இடுப்பில் ஏறி கட்டிக்கொண்டான். சந்தோசமாக!

சில நாள் கழித்து நாளை அறுவடை செய்யலாம் என்று அறுவடைக்கு தேவையான கதிரறுக்கும் அருவாளை எடுத்து வைத்து கொண்டு படுத்தார் அந்த பெரியவர். அன்றிரவு விடியற்காலையில் அதிரடியாக புயல் மழை பெய்தது. மழை அத்தோடு விடாமல் தொடர்ந்து 3 நாளைக்கு பெய்ததால் வெள்ளத்தில் நெல்மணிகள் எல்லாம் அடித்து சென்றுவிட்டது. வயலை பார்த்த ராசையா போன வருடம் மழை பெய்யாமல் பொழப்பு கெட்டது. இந்த வருடம் அறுவடை நேரத்தில் மழை பெய்தே கெடுத்து விட்டது என மனம் நொந்து விட்டிற்கு சென்றார்.  

வீட்டில் பேரன் குமார் தாத்தாவிடம், தாத்தா தாத்தா எனக்கு புது துணி எடுத்து தர்ரேன்னு சொன்னீங்களே எப்ப தத்தா எடுத்து தருவீங்க என்றான் விவரம் புரியாதவனாய். 

பேராண்டி நேற்று வரை பெய்த மழையினால் நெல்மணிகள் எல்லாம் மழையில் அடித்து சென்றுவிட்டது. அடுத்த போகத்தில் (பட்டத்தில்) விளைச்சல் கிடைத்த உடன் உனக்கு கண்டிப்பாக புதுத்துணி எடுத்து தர்ரேன் என்றார் கண்ணீர் மல்க!  பேரனும் ம்..ம்... என்றான் கண்ணீரை துடைத்துக்கொண்டே…!   


5 comments:

 1. very nice story sir....
  keep it up

  sampath,
  South Korea

  ReplyDelete
 2. உங்கள் வாழ்த்துக்கள் என்னை மேன்மேலும் எழுத தூண்டுகிறது. உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 3. nice ....inum idhu pondra siru kadhaigalai eludha manamarndha valthukkal...

  ReplyDelete
 4. வாழ்த்துகளுக்கு நன்றி யாஸ்மின் அவர்களே.

  ReplyDelete

நிலக்கடலையும் அதன் பயன்களும்

முனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...