அறிமுகம்
பிஸ்தாவின் தாவரவியல் பெயர் பிஸ்தாசியோ வீரா மற்றும் இது அனகார்டியேசியே குடும்பத்தை சார்ந்த தாவரம் ஆகும். சிறு மர வகையைச் சார்ந்த பிஸ்தாவானது, ஈரான் மற்றும் ஈராக் நாடுகளில் தோன்றி, தற்போது சிரியா, லெபனான், துருக்கி, கிரீஸ்,இந்தியா, பாகிஸ்தான், இத்தாலி, உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது.
பிஸ்தாவின் பயன்கள்
1. நோய் எதிர்ப்பு சக்தி
பிஸ்தாவில் அதிக அளவில் வைட்டமின் பி6 உள்ளது. இது, இரத்ததில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு மிகவும் அவசியமானது. அதோடு மட்டுமில்லாது செல்களுக்கு ஆக்ஸிஜனை கொடுக்கிறது.
வைட்டமின் “பி6” ஆனது, மனிதனுக்கு நோய் எதிர்ப்புத்திறனை தருவதோடு மட்டுமில்லாமல் வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்து மண்ணீரல் மற்றும் நிணநீரை பராமரிப்பவதிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் ஒரு மனிதனுக்கு வைட்டமின் பி6 குறைவாக இருந்தால் கண்டிப்பாக நோய் எதிர்ப்பு திறன் குறைந்து எளிதில் நோய் தொற்று ஏற்படுகிறது.
2.அழகான தோல்
பிஸ்தாவில் வைட்டமின்
“ஈ” மிகுந்துள்ளதால், இது தோல் முதிர்ச்சியடைவதை தடுத்து அழகான தோலினை தருகிறது.
மேலும் வைட்டமின் “ஈ” ஆனது புறஊதாக்கதிர்களால் தோல் பாதிப்பாகாமல் இருக்கவும் மற்றும்
தோல் புற்றுநோய் வராமல் இருப்பதிற்கும் உதவுகிறது.
3.ஆரோக்கியமான பார்வை
பிஸ்தா பருப்பில் சியாசாந்தின் (Zeaxanthin) மற்றும் லூட்டின் (Luetin) என்ற இரண்டு கரோட்டினாய்டுகள் காணப்படுகிறது. இந்த
கரோட்டினாய்டுகள் கண்ணின்விழித்திரையை
சீரழியாமல் பாதுகாத்து கண்பார்வைக்கு வழிவகுக்கிறது. மேலும் இவ்விரு
கரோட்டினாய்டுகளும் புற ஊதாக்கதிர்களினால் தோல் பாதிப்படையாமல் தடுப்பதற்கும்,
இருதய நோய்கள் வராமல் தடுப்பது மற்றும்
கண்புரை (Cataract) நோய்களிலிருந்து கண்களை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு
வகிக்கிறது. மேலும் கரோட்டினாய்டுகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு
என்னுடைய முந்தைய பதிவினை பார்க்கவும்.(இணைப்பு:
http://ashokkumarkn.blogspot.ca/2012/07/blog-post.html).
4.நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை
பிஸ்தாவில்
பாஸ்பரஸ் ஆனது அதிக அளவில் உள்ளதால், குளுக்கோஸை அமினோ அமிலமாக சிதைக்கிறது. இதனால்
நீரிழிவு நோயாளிகளுக்கு பிஸ்தா ஒரு நல்ல பயனுள்ள உணவாகும்.
5.இருதய நோய் அபாயத்தை குறைத்தல்
பிஸ்தா உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைத்து (LDL - Low density lipoprotein) நல்ல கொழுப்பினை (HDL -
High density lipoprotein) அதிகரிக்க செய்யும் என்று கூறப்படுகிறது. இது, மனிதனுக்கு இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
தமிழர்களிடையே சண்டை சச்சரவு ஏற்படும் போது நீ பெரிய பிஸ்தாவா என்று சொல்லுவதை நாம் கேட்டிருப்போம். இந்த கட்டுரையின் மூலமாக பிஸ்தாவின் முக்கியதுவத்தை நீங்கள் அறிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். மேலும் இத்தகைய பல்வேறு பயனுள்ள மற்றும் ஊட்டச்சத்துகள் மிகுந்த பிஸ்தா பருப்பினை நாமும் உண்டு மகிழ்ந்து உடல் நலத்தையும் காப்போமே!
குறிப்பு: ஜீலை-2013, கலைக் கதிர் அறிவியல்இதழில் வெளியிட்டுள்ளேன்.
ஊக்கத்திற்கு நன்றி நண்பரே..
ReplyDelete