Monday, May 27, 2013

இளநீரின் மகத்துவங்கள்

இன்றைய நாகரீக உலகில், மனிதன் சோர்வடையும் போது தேடிச்சென்று வாங்கி அருந்துவது ஊட்டச்சத்துக்கள் ஒன்றுமில்லாத கொக்க கோலா, பெப்சி, மிரான்டா மற்றும் 7 அப் போன்ற அமெரிக்க வகை குளிர்பானங்களை அருந்தி பணத்தையும் வீணடித்து, உடல் நலத்தையும் கெடுத்துக்கொண்டு உள்ளனர். ஊட்டச்சத்து மிகுந்த இளநீர் சாலையோரங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் சாதரணமாக கிடைக்கிறது. ஆனால், இளநீர் அருந்தும் மக்கள் குறைவானவர்களே. இயற்கை படைத்த  பானங்களிலேயே இளநீர் தான் மிகவும் மதிப்பு மிக்க புத்துணர்ச்சி தரும் பானம் என்றால் அது மிகையாகாது. உலக அளவில் மிகவும் தூய்மையான திரவத்தில் நாம் குடிக்கும் தண்ணீருக்கு அடுத்து இரண்டாம் இடத்தை இளநீரே பிடிக்கிறது.

கோடை கால தாகத்தை தனிப்பதில் இளநீரைவிட மிகச் சிறந்தது எதுவுமில்லைமேலும் கோடையில் மனித உடலானது  வியர்வை காரணமாக கணிசமான அளவு தண்ணீரை இழக்கிறது. இளநீரில் இயற்கையாக அதிக அளவில் மின்-பொட்டசியம் (electrolyte- potassium) உள்ள காரணத்தினால்எலக்ட்ரோலைட் மறுநிரப்பல் (electrolyte replenishment)  செய்து உடலில் உள்ள நீரின் அளவை சரியாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இளநீரானது, பாட்டில்களில் அடைத்து வைத்துள்ள பழச்சாறுகள், சோடா மற்றும் ஆற்றல் பானங்களை (energy drinks) விட மிகவும் சிறந்ததுஎனவே கோடையில் இளநீரை அருந்தி தாகத்தை தணியுங்கள்.

இளநீரின் சுகாதார நலன்கள்
1. இளநீர் அருந்துவதினால் உடலில் உள்ள கொழுப்பு மற்றும் குளோரைடுகள் குறைவதினால் உடல் எடையும் குறைகிறது. மேலும் இளநீர் பசியை குறைக்கிறது.
2. சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறதுஎனவே இது நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த பானம் ஆகும்.
3. இளநீரில்  பொட்டசியம் மற்றும் மக்னீசியம் தாதுக்கள் உள்ளதால் மனிதர்களுக்கு சிறுநீரக கற்கள் உண்டாவதை குறைக்கிறது. எனவே   சிறுநீரக கல் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குஒவ்வொரு மாற்று நாள்  (ஒரு நாள் விட்டு ஒரு நாள்) என இளநீரினை குடித்து வந்தால், சிறுநீரக கல் நோய் படிப்படியாக குறையும் என சிறுநீரகவியல் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
4.  இளநீரானது  சிறுநீரை உற்பத்தி மற்றும் வெளியேற்றத்தை அதிகரிக்க செய்கிறது.
5. இளநீரில்  பி காம்ளக்ஸ் வைட்டமின்களான  ரிபோபிலாவின், நியாசின், தையமின், பைரிடாக்சின், மற்றும் போலிக் அமிலங்கள் அதிக அளவில் காணப்படுகிறது. மேலும், இதில் அமினோ அமிலங்கள், நொதிகள் (என்சைம்கள்), நார்ச்சத்து உணவு, வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு போன்ற கனிமங்கள் நிறைந்துள்ளது.
6. இளநீரில் மோனோலாரின் (monolaurin) என்ற வேதிப்பொருள் உள்ளதால்  நச்சுயிரி (வைரஸ்) மற்றும்  பாக்டீரிய நோய் எதிர்ப்பு திறனுடையது.
7. இளநீரில் சைட்டோகனின் என்னும் வளர்ச்சி ஹார்மோன் உள்ளதால் வயது மூப்பினை தள்ளி போட்டு இளமையான தோற்றத்தை தருகிறது என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் முகப்பருக்கள்புள்ளிகள், சுருக்கங்கள் போன்றவற்றை நீக்கி இளமை தேடும்  மென்மையான தோலினை தருகிறது.
8. இளநீரானது  நகங்கள் மற்றும் மென்மையான முடி வளர்ச்சி உதவுகிறது.
9.இளநீரில் அதிக பொட்டாசியம் உள்ளதால், உடலில் உயர் இரத்த அழுத்தத்தினை குறைக்கிறது.

10. இளநீரை நொதிக்க வைத்த (Fermentation) பின்பு  நட்டா டி கோகோ (Nata de coco) என்ற ஜெல்லி போன்ற உணவுப்பொருள் தயாரிக்கப்பட்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் பயன்படுத்தப்படுகிறது.
11. கர்ப்பிணிப் பெண்கள் இளநீரை அருந்துவதால் இயற்கையாகவே செரிமாண பிரச்சினைக்கு தீர்வாகிறது.


எனவே, பல்வேறு வியக்கத்தக்க மருத்துவ பயன்பாடுகள் உடைய இளநீரை நாமும் பருகி நல்ல உடல் நலத்தோடு வாழ்வோமே!.

குறிப்பு: இக்கட்டுரையை கலைக்கதிர் இதழில் மே-2013 பதிப்பில் வெளியிட்டுள்ளேன்.

1 comment:

  1. காலத்திற்கு ஏற்ப பகிர்வும் சிறப்பு .வெளிநாடுகளில் இந்த மாதிரி குழு குழு இளநீர் கிடைக்காது சகோ நாங்கள் தான் பாவம் :)

    ReplyDelete

நிலக்கடலையும் அதன் பயன்களும்

முனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...