அறிமுகம்:
தாவரவியல் பெயர்: ஜிம்னிமா சில்வஸ்டிரிஸ்
குடும்பம்:
அஸ்கிலிபிடேசியே
நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்தாக பயன்படும் மூலிகைப் பயிரான சிறுகுறிஞ்சான் (Gymnema) பற்றி வளரும் தாவர வகையைச் சார்ந்தது. இப்பயிர் 1.5 மீட்டர் முதல் 3 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. மஞ்சள் நிற மலர்களைக் கொண்ட இப்பயிர் பொதுவாக இந்தியாவின் காடுகளில் காணப்படுகிறது. மேலும் இப்பயிர் இந்தியாவில் உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா, பீகார் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இயற்கையாக காணப்படுவதுடன் தற்போது சிறிய அளவில் பயிரிடப்பட்டும் வருகிறது.
வேதிப்பொருட்கள்:
சிறுகுறிஞ்சானில் ஜிம்னிக் அமிலம், டார்டாரிக் அமிலம், பார்மிக் அமிலம், பியூட்ரிக் அமிலம், ஆந்தர குயினோன் மற்றும் ரெசின்கள் போன்ற வேதிப்பொருட்கள் இலைகளில் காணப்படுகிறது.
மருத்துவ பயன்கள்:
- சிறுகுறிஞ்சான் மூலிகைப்பயிர் நவீன மருத்துவத்தில் நீரிழிவு நோய்க்கு மருத்துவ பொருளாக பயன்படுட்கிறது. இந்தியாவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிறுகுறிஞ்சானை நம்முன்னோர்கள் நீரிழிவு நோய்க்கு மருந்தாக பயன்படுத்தியுள்ளனர்.
- சிறுகுறிஞ்சானில் உள்ள வேதிப்பொருள்கள் மனித உடலில் இன்சுலின் அளவை சரியான விகிதத்தில் வைத்துக் கொள்ள உதவுகிறது.
- மனித சிறுநீரகத்திலிருந்து அதிகப்படியான சிறுநீரை வெளியேற்றவும் சிறுகுறிஞ்சான் பயன்படுகிறது.
- மேலும் மனிதனுக்கு ஏற்படும் ஜலதோசம், மலேரியா காய்ச்சல், மற்றும் செரிமான கோளாருகளை நிவர்த்தி செய்யும் மருத்துவ பொருள்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பு: நீரிழிவு நோயை குணப்படுத்தும் மற்றுமொரு தாவரமான இனிப்புத்துளசியை பற்றி தெரிந்து கொள்வதற்கு என்னுடைய பதிவினை பார்க்க பின்வரும் இணைப்பினுள் செல்லவும். http://ashokkumarkn.blogspot.ca/2011/07/diabetes-stevia.html
No comments:
Post a Comment