அறிமுகம்
மனிதன் நலமுடன் வாழ்வதற்கு கனிம தாதுக்கள் மிக முக்கிய பங்குவகிக்கிறது. ஆனால் தாதுக்களை உப்புகளை மனித உடல் தானே உற்பத்தி செய்வதில்லை. எனவே, கனிம தாதுக்களை நாம் உண்ணும் உணவிலிருந்தே பெறவேண்டியது அவசியமாகிறது. மேலும்
ஆரோக்கியமான தாதுக்கள் மனித உடலில் இல்லாத சமயத்தில் எளிதில்
பல்வேறு வகையான நோய் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்.
கனிம தாதுக்கள் மனித உடலில் குறையும் போது இரத்த சோகை, தைராய்டு செயலிழப்பு, எலும்பு தேய்மானம் மற்றும் பாலியல் முதிர்ச்சி போன்ற நோய்கள் எளிதில் வருகிறது. மனித உடலுக்கு தேவையான மிக முக்கியமான தாதுக்களையும் அதன் பயன்களையும் கீழே விளக்கமாக காண்போம்.
1.
இரும்பு:
உடலில் வளர்சிதை மாற்றம் நடைபெறுவதற்கு மிக முக்கியமான கனிமம் இரும்பு ஆகும். இது
மனித உடலில் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி செய்து
ஆக்சிஜனை உடல் முழுவதும் எடுத்து செல்ல உதவுகிறது. மேலும் இரும்பு சத்தானது மனிதனுக்கு நோய்தடுப்பாற்றலையும் தருகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு இரும்புச் சத்து மிக மிக அவசியமானது. ஏனெனில், கருவுற்ற பெண்ணிற்கு
வழக்கமான அளவைவிட சுமார் 50 சதவிகிதம் இரத்தம் அதிகமாகிறது. ஆகையால் அதிக அளவில் ஹீமோகுளோபினை உற்பத்தி செய்வதற்கு அதிக அளவு இரும்புச்சத்து
தேவைப்படுகிறது. மேலும் குறிப்பாக இரண்டாவது மற்றும் மூன்றாவது கர்ப்ப கால நிலையில் (2 & 3 trimesters) வளர்ந்து வரும்
குழந்தை மற்றும் நஞ்சுக்கொடிக்காக (placenta) கூடுதலாக இரும்பு
சத்து தேவைப்படுகிறது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரும்பு சத்து குறைபாட்டுடன் இரத்த சோகை, குறைபிரசவம், குழந்தையின் குறைந்த பிறப்பு எடை, மற்றும் குழந்தை இறப்பு போன்றவை தொடர்புடையது.
இரும்பு சத்தானது சிவப்பு இறைச்சி, மீன், கோழி,
முட்டையின் மஞ்சள் கருக்கள், பருப்பு வகைகள், உலர்ந்த பழங்கள், முந்திரி பருப்பு மற்றும் கரும் பச்சை நிறமுடைய கீரைகளில் மிகுந்து காணப்படுகிறது. இரும்பு சத்து குறைபாட்டினால் உடல் சோர்வு, தலைச்சுற்று, முடி உதிர்தல் மற்றும் நோயெதிர்ப்பு திறன் குறைபாடு போன்றவைகள் உண்டாகிறது.
2.
கால்சியம்:
மனித உடலில் அதிக அளவில் உள்ள தாதுப்பொருள் கால்சியம் ஆகும். மனித உடலில் 99 சதவித கால்சியமானது எலும்பு மற்றும் பற்களிலும் 1 சதவிதம் இரத்தம் மற்றும் திசுக்களிலும் உள்ளது. இது எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக வைத்திருக்க உதவுகிறது.
மேலும் இது இரத்த அழுத்தம், மற்றும் ஹார்மோன் சுரப்பை கட்டுப்படுத்துவதிலும்,
தசை இயக்கம்,
மற்றும் இரத்தம் உறைவதற்கும் முக்கிய பங்குவகிக்கிறது. மேலும் வளரும் பருவத்திலும், கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் கால்சியம் அதிக அளவில்
தேவைப்படுகிறது. கால்சியமானது நரம்பு வழி செய்தி பரிமாற்றத்திற்கு
இன்றியமையாததாகும். உடலுக்கு கால்சியம்
சத்தானது வாழ் நாள் முழுவதும் தேவைப்படுகிறது என்றால் மிகையாகாது.
ஒரு நாளைக்கு மனிதர்களுக்கு பரிந்துரைக்கப்படும் கால்சியத்தின் அளவானது 1000-1500 மைக்ரோகிராம் ஆகும். கால்சியம் குறைபாட்டினால் எலும்பு தேய்மானம், எலும்பு
உடைதல், தசை வலிப்பு மற்றும் மூட்டுகளில் கூச்ச உணர்வு போன்றவை
உண்டாகிறது. மேலும் காயம் ஏற்பட்டால் இரத்தம் உறைதல் தாமதமாகிறது. கால்சியம்
பால் மற்றும் பால் பொருட்கள், எள்ளு, வெண்டைக் காய், ப்ரக்கோலி, சோயாபீன்ஸ், கீரைகளில் அதிக அளவில் காணப்படுகிறது.
கால்சியம் சத்து அதிகமானால் சிறுநீரகம், பித்தப் பைகளில் கற்கள் உண்டாவதற்கு வாய்ப்புள்ளது. எனவே கால்சியம் அதிகம் உள்ள பொருள்களை உண்ணும் போது எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்.
3.
மெக்னிசியம்
கால்சியத்தை போன்று எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக வைத்திருக்க உதவும் மிக அத்தியாவசியமான மற்றொரு தாதுப் பொருள்
ஆகும். தசை இயக்கம் மற்றும் நரம்பு வழி செய்தி பரிமாற்றத்திற்கும் மெக்னிசியம்
இன்றியமையாததாகும்.
மேலும் இது உடலுக்கு நோய் எதிர்ப்பு திறனை கொடுக்கிறது. மனிதர்களுக்கு ஒரு நாளைக்கு பரிந்துரைக்கப்படும் மெக்னிசியத்தின் அளவானது 310 - 320 மில்லி கிராம் ஆகும். ஆனால் கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு நாளைக்கு
350 - 360 மில்லி கிராம் மெக்னிசியம் பரிந்துரைக்கப்படுகிறது.
கர்ப்பிணி
பெண்களின் உடலில் புதியதாக திசுக்களை
உருவாக்குவதற்கும், பழுதடைந்த திசுக்களை சரி செய்யவும் மெக்னிசியம் உதவுகிறது.
மேலும் கர்ப்ப காலத்தில் மெக்னிசியம் பற்றாக்குறை ஏற்பட்டால் கரு வளர்ச்சி குறைந்தும், குழந்தை இறப்பிற்கும் வழிவகுக்கிறது. மெக்னீசியம் குறைபாட்டினால் குமட்டல், தசைபிடிப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதயம் படபடத்தல் போன்றவை உண்டாகிறது.
உடலுக்குத் தேவையான மெக்னீசியமானது
தானியங்கள், நிலக் கடலை, எள்ளு, கீரை வகைகள்,
பீன்ஸ், இறைச்சி,
உலர் அத்திப் பழம், பருப்பு வகைகள், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றில்
அதிக அளவில் உள்ளது.
4. பொட்டாசியம்
இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கவும்,
இரத்த கார சமநிலையை பராமரிக்கவும், உடலின் சாதாரண வளர்ச்சிக்கும்
பொட்டாசியம் உதவுகிறது. கர்ப்பிணி மற்றும் தாய்ப் பால் தரும் பெண்களுக்கு முறையே தினமும்
4,700 மற்றும் 5,100 மில்லி கிராம் பொட்டாசியம் தேவைப்படுகிறது. இரத்தத்தில் பொட்டாசியம் குறைபாட்டினால் ஹைபோகலீமியா நோய் மனிதர்களுக்கு ஏற்படுகிறது. இந்நோயின் அறிகுறிகள், தசைப்பிடிப்பு, பக்கவாதம் மற்றும் அசாதாரண இதய துடிப்பு போன்றவைகளாகும்.
மாட்டிறைச்சி, மீன், திராட்சை, வாழை, பரங்கி, உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி போன்றவை பொட்டாசியம் அதிகமுள்ள உணவுகளாகும்.
5.
துத்தநாகம் (ஜிங்க்-
Zinc)
உடலில் உள்ள ரசாயன எதிர்வினைகளுக்கு துத்தநாகம் இன்றியமையாததாகும். இது
உடலில் உள்ள உறுப்புகள், திசுக்கள் மற்றும் திரவங்களில் இருக்கிறது. துத்தநாகம் உடலுக்கு நோய் எதிர்ப்பு திறனை கொடுப்பதற்கு அவசியமாகிறது. மேலும் இது தொற்று நோய்களை வராமல் தடுப்பதற்கும், துரிதமாக காயங்களை குணப்படுத்த உதவுகிறது. துத்தநாகம்
குறைபாட்டினால், பசியின்மை,
நிமோனியா மற்றும் வயிற்றுப்போக்கு உண்டாகி கர்ப்ப காலத்தில் தாய் மற்றும் கருவின் நலனை
பாதிக்கிறது.
மாட்டிறைச்சி,
கோழி, முட்டை, பருப்பு, முழு தானியங்கள், பால் பொருட்கள், நிலக் கடலை மற்றும் சிப்பிகளில் அதிக அளவு துத்தநாகம் காணப்படுகிறது.
குறிப்பு: இந்த கட்டுரை விரைவில் அறிக அறிவியல் மாத இதழில் வெளிவர உள்ளது.
No comments:
Post a Comment