Tuesday, July 5, 2011

கிராமிய காதல் பாடல்


ஆத்தங்கரையோரம் ஐஞ்சு மணிக்கு வாடி
என் அக்கா பொண்ணே... உனக்கு நல்ல கண்ணே
நான் வருவேன் உனக்கு முன்னே! (ஆண்)

ஆத்தங்கரையோரம் கொஞ்சி பேச வாய்யா
என் மாமா பையா
நீ ஒரு டப்பா பையா... (பெண்)

ஏய் ஏரிக்கரையோரம் எட்டு மணிக்கு வாடி
என் அத்தை பொண்ணே உனக்கு முட்ட கண்ணே
நான் வருவேன் உனக்கு முன்னே! (ஆண்)

ஏரிக்கரையோரம் வரேன் மச்சான்
ஏதாச்சும் செய்யலாமா என் மக்கு மச்சான்
நீ சொல்லு மச்சான்... (பெண்)

முந்திரி காட்டுக்கு முந்திகிட்டு வாயேன்டி
என் மாமன் பொண்ணே, அட குட்ட பொண்ணே
நான் வருவேன் உனக்கு முன்னே! (ஆண்)

முந்திரி காட்டுக்கு வந்தேனா
முந்திகிட்டுசெஞ்சிடுவே  என் பொல்லாத மாமா
நான் வரல அது  பொல்லாப்பு மாமா... (பெண்)

கரிச காட்டு பக்கம் காலையிலே வாயேன்டி
காதல் கீதல் பண்ணுவோம்  என் முறைப்பொண்ணே
நான் வருவேன் உனக்கு முன்னே! (ஆண்)

தாலிய கட்டி புட்டு எங்க நீ கூப்பிட்டாலும்
தட்டாம நான் வருவேன் என் முறை மாமா
அதுவரைக்கும் கொஞ்சம் பொறு மாமா... (பெண்)

No comments:

Post a Comment

நிலக்கடலையும் அதன் பயன்களும்

முனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...