இராஜராஜ சோழனின் புதல்வனே
அயல் நாட்டிற்கு படையெடுத்த
முதல் இந்திய மன்னனே!
ஈழத்தை போரிட்டு
ஐந்தாம் மஹிந்தா-வை வென்றவனே!
உனது ஆட்சி காலத்தில்
சிங்கப்பூர், மலேசியா,
சுமத்திரா நாடுகளை
போரில் வென்று ஆட்சி புரிந்தவனே!
கங்கை வரை சென்று
வங்கதேசத்தை வென்று
சோழமண்டலத்திற்கு
கங்கை கொண்ட சோழபுரத்தினை
புதிய தலைநகராய் தந்தவனே!
கங்கை கொண்ட சோழபுரத்தில்
தஞ்சைக்கு நிகரான
சிவன் கோவிலை கட்டியவனே!
கடல்கடந்து
கடாரம் நாட்டை கைப்பற்றிய
கடாரம்கொண்டானே!
உலகிற்கு தமிழனின்
கங்கைகொண்ட சோழனே!
வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த
உன் புகழ் நீடுழி வாழியவே...!
மாவீரன் இராசேந்திர சோழ தேவர் பற்றிய உங்களது கவிதை மிகவும் அருமை!
ReplyDeleteதொடரட்டும் உங்களது தமிழ்ப்பணி!