ஆனி மாதம் போயிடுச்சு
ஆடி பட்டம் வந்துடுச்சி
ஏ புள்ள அடிவானம் கருக்குதடி
கலப்பைய சரி செய்ய
தச்சன்கிட்ட போறேன்டி
விவசாய பண்ணைக்கு போயிதான்
வெள்ளை பொண்ணி விதை நெல்லு
வாங்கி வாடி என் பொண்ணம்மா…
மழையுந்தான் பெய்ஞ்சிடுச்சி
மண் வாசம் அடிச்சிடுச்சி
ரெண்டு மாடு கட்டிய கலப்பையிலே
நிலத்த நான் உழபோறன் என் கண்ணம்மா…
தொளி அடிச்ச வயலிலே
மூணு வாரமான நெல் நாற்றெடுத்து
ஒத்த நாற்று முறையிலே நடேன்டி என் செல்லம்மா…
மாசத்திற்கு ஒருமுறை தான்
களையுந்தானெடுத்து
பூச்சி, நோயிலிந்து இயற்கையான மருந்தடித்து
பயிரையும் காத்திடணும் என் முத்தம்மா…
தை மாதம் வந்துடுச்சி, நெல்லும் முத்திடுச்சி,
அறுவடைக்கு ஆளோட
வயலுக்கு வந்துவிடு என் செல்லம்மா….
நல்ல விளைச்சலும் கிடைச்சிடுச்சி
பொங்கலும்தான் வந்துடுச்சி
புது நெல்லெடுத்து சோறு பொங்கிதான்
கதிரவனுக்கு நன்றி செலுத்தனும் என் கண்ணம்மா…
பெரியவன் ராசா தான் படிக்காம போயிட்டான்
விளைஞ்ச நெல்ல விற்று சின்னவன் குமார
பட்டனத்து பள்ளியிலே சேர்கனும் என் பொண்ணம்மா
அடுத்த வருடத்திற்கு விதை நெல்ல
வெளியில வாங்கிதான் விதைக்கனும்
இதுதான விவசாயி நெலமனு சொல்லுடி என் முத்தம்மா.
அழகிய பாடல்த் தெரிவு .நன்றி பகிர்வுக்கு ......
ReplyDeleteஊக்கப்படுத்தியற்கு மிக்க நன்றி.
ReplyDelete