மாட்டு வண்டி பூட்டிகிட்டு
மாயவரம் சந்தைக்குதான்
மாம்பழம் விற்க போறேன்டி
மச்சினிச்சி நீயும் கொஞ்சம் ஒத்தாசைக்கு வாயேன்டி (ஆண்)
சந்தைக்கு நீ வந்தீனா
தலை நிறய மல்லிப்பூவ
மாமன் காரன் வாங்கிதான் வெச்சுடுவேன்
கை நிறய வலையலதான் வலிக்காம போட்டுவேன். (ஆண்)
சந்தைக்கு நான் வந்தேன்னா
இராத்திரிக்கு கூப்பிடுவே
சரிபட்டு வராது சஞ்சலமும் கூடாது மாமன்காரா
அதுக்கு வேறாள பாரு என் மாமன்காரா (பெண்)
மாட்டு வண்டி பூட்டிகிட்டு
மாயவரம் சந்தைக்குதான்
மாமன்காரன் போறேன்டி
மச்சினிச்சி யாரவது ஒத்தாசைக்கு வாங்களேன்டி! (ஆண்)
No comments:
Post a Comment