Wednesday, June 22, 2011

ச‌ரித்திர‌ம் ப‌டைப்போமா?


கடலில் அலைகள்
அமைதி கன்டதாய்
சரித்திரம் இல்லை.
தென்றலாய் வீசும்
காற்று நின்றதாய்
சரித்திரம் இல்லை.
தேனுக்காக மலர்களை
தேடிச்சென்ற தேனீக்கள் தோற்றதாய்
சரித்திரம் இல்லை.
ஆனால்...
இளைஞர்களே நாம் மட்டும்
உறக்கத்தில் உள்ளோம்,
நாம் விழித்தெழுவது எப்போது?
2020-ல் இந்தியா
அனைத்து துறைகளிலும் தன்னிறைவடைந்து
வல்லரசு நாடாகுமென்று கலாம் சொல்லியது
இன்றைய இளைஞர்களின்
மீது வைத்திருந்த நம்பிக்கையில்!
கலாமின் க‌ன‌வை
நாம்நினைவாக்குவ‌து எப்போது?
இளைஞர்களே...
விழித்தெழுங்க‌ள்
2020-‍ம் ஆண்டினுள்
நாம் புது ச‌ரித்திர‌ம் ப‌டைத்து
க‌லாம் க‌ன‌வை நிறைவேற்றுவோம்
இளைஞர்களே...
ச‌ரித்திர‌ம் ப‌டைக்க‌ வாருங்க‌ள்...

1 comment:

  1. முயற்சி திருவினையாக்கும் .தங்களின் இக் கவிதைமூலம் தேசப்பற்றை நன்கு உணரமுடிகின்றது .இந்த உணர்வு எல்லா இளைஞர்களிற்கும் வந்துவிட்டால் நிட்சம் சரித்திரம் படைக்க
    முடியும் சகோ .வாழ்த்துக்கள் உங்கள் எண்ணம் நிறைவேற .மிக்க நன்றி பகிர்வுக்கு ...............

    ReplyDelete

நிலக்கடலையும் அதன் பயன்களும்

முனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...