உலக மொழிகள் மூவாயிரம்
அதனில் முதற்மொழியாகிய தமிழ்மொழியே!
குமரிக்கண்டத்தில் பிறந்த
செம்மொழிச் செந்தமிழே!
தமிழர்கள்தாம் உலகிற் தோன்றிய மாந்தர்கள்
என்பதினை உலகினிற்கறிய வைத்த செம்மொழியே!
உலகமொழிகளில் இயன்மொழிக்கென்று
பதினாறு பண்புகளை கொண்டிருக்கும்
செம்மொழிச் செந்தமிழே!
திராவிட மொழிகட்கெல்லாம்
தாய்மொழியாம் தமிழ்மொழியே!
இயல், இசை, நாடகத் தமிழெனும்
இலக்கிய முத்தமிழே!
ஆரிய மொழிகளின் ஆதிக்கத்திலிருந்து
சீரழியாது வந்த பைந்தமிழே!
உனக்குப்பின் தோன்றிய மொழிகளெல்லாம்
அழிந்துவரும் நிலையில்
நீ மட்டும் உலகளவில் வளர்ந்துவரும் செந்தமிழே!
முச்சங்கங்கள் வைத்து வளர்க்கப்பட்ட
தாய் மொழியாம் தமிழ் மொழியே!
உந்தன் மகத்துவத்தினால் உலக மக்களை வியக்க வைத்த
செம்மொழிச் செந்தமிழே! நீ வாழி!
Good Work
ReplyDelete