நான் சிறுவனாக
இருந்த போது
இருந்த போது
என்னோடு சேர்ந்து விளையாடிய
முதல் தோழி.
சிறு வயதில் என்னோடு சேர்ந்து
மணற் வீடு கட்டியவள்.
சிறு வயதில் நம்மிடையே நடந்த சண்டையில்
நீ என்னை அடித்தாலும்
அழாதடா தம்பி
இனி உன்னை அடிக்கமாட்டேனென்று
ஆறுதல் கூறுபவள்.
அம்மா முந்திரி காட்டிற்கு சென்ற சமயங்களில்
எனக்கு சோற்றினை உருண்டை பிடித்து ஊட்டியவள்.
பள்ளி செல்கையில்,
உன்னோடு என்னையும் கைப்பிடித்து
பள்ளிக்கு அழைத்து சென்றவள்.
கல்லூரி பயில்கையில்
நான் ஊருக்கு வந்தால்
ஐம்பது மைல் தொலைவிலிருந்தும்
என்னை பார்க்க ஊருக்கு வருபவள்.
நான் கல்லூரியிலிருந்து
தொலைபேசியில் உன்னை அழைக்கும் போது
நீ கேட்கும் முதல் வார்த்தை
தம்பி நல்லாயிருக்கியா? யென்று...
இது போன்று,
இன்னும் எத்தனை பாசங்களை
என் மீது காட்டப்போகிறாய்?
அந்த நாட்களுக்காக காத்திருக்கிறேன்
இனி வரும் காலங்களில்...
அம்மா முந்திரி காட்டிற்கு சென்ற சமயங்களில்
ReplyDeleteஎனக்கு சோற்றினை உருண்டை பிடித்து ஊட்டியவள்.
உங்களுடைய கருத்து மற்றும் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.
ReplyDelete//சிறு வயதில் நம்மிடையே நடந்த சண்டையில்
ReplyDeleteநீ என்னை அடித்தாலும்
அழாதடா தம்பி
இனி உன்னை அடிக்கமாட்டேனென்று
ஆறுதல் கூறுபவள்.
அம்மா முந்திரி காட்டிற்கு சென்ற சமயங்களில்
எனக்கு சோற்றினை உருண்டை பிடித்து ஊட்டியவள்.//
superb lines
thanks
sambathkumar