கிராமத்தில்...
கிழக்கு தெருவில் ஒருவன்
மரமேறி தவறி கீழே விழுந்துவிட்டால்
அடுத்த தெருவிலிருந்து
அலரியடித்து ஓடிவந்து மருத்தவமனைக்கு
அவனை அழைத்து
சென்றதைக் கண்டு வியந்ததில்லை.
விசக் காய்ச்சலில்
படுத்தவனை அண்டை வீட்டாரும்,
முகம் தெரியாத மனிதர்களும்
நலம் விசாரித்து
சென்றதைக் கண்டு வியந்ததில்லை!
நகரத்தில்...
இரு சக்கர வாகனத்தில்
சென்றவனை பேருந்து இடித்து செல்ல
கீழே விழுந்தவனுக்கு
குருதி ஆறாய் பெருக்கெடுத்தோடி
உயிர் ஊசலாட கிடப்பவனை
அருகில் வந்து கூட பார்க்க ஆளில்லை
என்பதை கண்டு வியந்தேன்
அவசர உலகத்திலிருக்கும்
நகர மக்களுக்கு
மனிதநேயம் மறந்து போனதென்று..!
ஆம் உண்மை நீஙக்ள் சொல்லியது அனைத்தும் சத்திய வார்த்தைகள்!
ReplyDeleteகருத்து எழுதியமைக்கு நன்றிகள். இந்த கவிதையில் இன்றைய அவசர உலகில் நகரத்தில் மக்களின் மனிதநேயம் எப்படி உள்ளது என் குறிப்பிட்டுள்ளேன் அவ்வளவுதான்.
ReplyDelete