Wednesday, June 22, 2011

செம்மொழிக்கேன் இந்நிலை?

தமிழர்களே...            
நீங்கள் மும்முறை தமிழ்
எனும் வார்த்தையை உச்சரித்து பாருங்கள்,
உங்கள் உமிழ் நீரும்
ஊற்றெடுக்க தொடங்கும்!
ஆனால்...?
இத்தகைய தாய் (தமிழ்) மொழியை
தூய தமிழில்
நாம் பேச தயங்குவதேன்?
நாகரீகமென்று நினைத்து
ஆங்கிலம் கலந்த தமிழை பேசி
தமிழை (தாயை) கொல்கிறோம்!
எத்தாயாவ‌து த‌ன் குழ‌ந்தைக்கு
விசம் கலந்த‌ பாலினை கொடுப்பாளா?
ஆம், இங்கே கொடுக்கிறாள்
தாய் முத‌லில் குழ‌ந்தைக்கு
சொல்லித்த‌ர‌ வேண்டிய‌ வார்த்தை
அம்மா, அப்பாயென்று
ஆனால்...இங்கே சொல்லித‌ருவ‌தோ
ம‌ம்மி, டாடியென்று
ஆங்கில‌மெனும் விச‌ப் பாலினை ஊட்டி
ம‌கிழ்ச்சியும் அடைகிறார்கள்
இன்றைய‌ பெற்றோர்க‌ள்.
அய‌ல் மொழியை க‌ற்ப‌து த‌வ‌றில்லை
ஆனால்..
அன்னை மொழியிலேயே பேசிட‌ வேண்டும்.
ப‌ழ‌மையான‌, தொன்மையான‌
செம்மொழியே...
உந்த‌ன் ம‌க‌த்துவ‌த்தினை
என்ற‌றிவார்க‌ள்
இந்த த‌மிழ‌ர்க‌ள்?
எப்போத‌ழியும் ஆங்கில‌ மோக‌ம்?
எப்போத‌ழைக்கும் த‌மிழ் தாக‌ம்?       

No comments:

Post a Comment

நிலக்கடலையும் அதன் பயன்களும்

முனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...