காற்றடித்தால்
புழுதி பறக்கும் மண் சாலைகள்
தார் சாலைகளாய்...
தாவணி அணிந்து வந்த
கன்னியர்கள்
மிடி, சுடியுடன்...
கிட்டி புல் விளையாடிய
சிறுவர்கள் கையில்
கிரிக்கெட் மட்டைகள்...
தபாலில் தகவல்
அனுப்பியவர்கள்
அலைபேசியில்...
மாட்டு வண்டியில்
பயணித்தவர்கள்
விமானத்தில்...
காகிதத்தில்
காதலை சொல்லியவர்கள்
கணிப்பொறியில்..
மழை பொழிந்தால்
நீர் ஒழுகும் கூரைவீடுகள்
அடுக்குமாடி வீடுகளாய்...
எல்லாம் மாறியும்
மாறவில்லை
மனிதர்களின் சாதி, மதச் சண்டைகள்!
nice kavithai Dr
ReplyDeleteDhooool kavingarae !!!
ReplyDeleteஅருமையான் வரிகள் சகோ .உண்மையை எடுத்து
ReplyDeleteவிளம்பியவிதம் அருமை!..என் தளத்தில் கவிதைகள்
காத்திருக்கின்றன .முடிந்தவரைக் கவிதைக்களைக்
கண்டு களியுங்கள் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ......
ஊக்கத்திற்கு மிக்க நன்றிகள் நண்பர்களே...
ReplyDelete