இந்தியாவில் நாளுக்கு
நாள் அதிகரித்துவரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப
நாம் நமக்கு தேவையான உணவுப்
பொருட்களை உற்பத்தி செய்து உணவுத்தேவையை பூர்த்தி
செய்யவேண்டிய காலகட்டத்தில் உள்ளோம். சமீபகாலமாக வேளாண்மையில் உணவுப் பொருள்களின் உற்பத்தியை
அதிகரிப்பதற்கு பல நவீன யுக்திகளை
பயன்படுத்தி வருகின்றனர். அவற்றில் தற்பொழுது உயிரி தொழில் நுட்பவியல்
(Biotechnology) துறை சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிகள்
நடைபெற்று வருகிறது. இதில்
திசுவளர்ப்பு (Tissue
culture) முறையின் மூலமாக செயற்கை விதைகள்
உருவாக்கப்படுகிறது. பொதுவாக
விதைகளானது பயிர்களில் கருவுறுதல் நடைபெற்றபிறகு சூற்பைகளில் உள்ள சூல்கள் விதைகளாக
மாறுகிறது. இவ்விதையில் கருவிற்கு வேண்டிய ஊட்டப்பொருள்கள் சேமித்து
வைக்கப்படுகிறது. ஆனால் திசுவளர்ப்பின் மூலமாக
இழைமத் திசுவிலிருந்து (Callus) பெறப்பட்ட கருவுறுக்களை
(Embryoids) ஹைட்ரோ ஜெல்லில் (உ.தா: கால்சியம்
ஆல்ஜினேட்) சேமித்து வைத்து உறையிடப்பட்டு செயற்கை
விதை உருவாக்கப்படுகிறது. எனவே, இத்தகைய பாதுகாக்கப்பட்ட
கருவுருக்களை உறையிடப்பட்டு (encapsulation) ஆய்வகங்களில் வளர்க்கப்பட்ட பயிரின் மொட்டுகள், கிழங்கின்
பகுதிகள் மற்றும் ஆக்குத் திசுவிலிருந்து
பெறப்பட்ட சிறு செடிகளை செயற்கை
விதைகள் என்றழைக்கப்படுகிறது.
உடல கருக்கள் (Somatic embryos) சைகோடிக்
கருவிற்கு ஒப்பானவை என்றாலும் பாதுகாக்கப்பட்ட சூழ்நிலையில் உள்ள ஆய்வுக்கூடத்தில் மட்டுமே
வளர்க்க முடியும். உடல கருவுருக்களுக்கு விதையுறை
இல்லாத காரணத்தால் இதை திசுவளர்ப்பு ஊடகத்தில்
வளர்ச்சி ஊக்கிகளை (ஆக்ஸின் மற்றும் சைட்டோகைனின்)
சரியான விகிதத்தில் கலந்து அதில் இழைமத்திசுவை
(காலஸ்) வளர்த்து அதிலிருந்து கருவுருக்கள்
(Embryoids) பெறப்படுகிறது. செயற்கை
விதைகளை எளிதாக நுண்ணுயிர்கள் தாக்கிவிடும்
தன்மை கொண்டது. மேலும் இவ்விதைகள் விரைவில்
நீரை இழந்து உலர்ந்துவிடும். எனவே,
இதை தவிர்ப்பதற்கு கால்சியம் ஆல்ஜினேட் என்ற வேதிப்பொருளால் கருவுருவைச்
சுற்றி உறை உண்டாக்கப்படுகிறது. இத்தகைய
விதைகள் நிலத்தில் பயிரிடும் போது சூழ்நிலைகளால் பாதிக்காமல்
சாதாரண விதைகளைப் போன்றே செயல்படுவதாக பல்வேறு
ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றது.
செயற்கை விதையின்
வகைகள்:
உற்பத்தி செய்யும்
முறையினை பொருத்து செயற்கை விதைகளானது இரண்டு
வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவைகளைப்பற்றி கீழே விரிவாக காண்போம்.
1. வேதிப்பொருள் மூலம் உறையிடப்பட்ட
விதைகள்
(Hydrated seeds)
இந்த முறையில்
உடல கருவுருவானது கால்சியம்
ஆல்ஜினேட் என்ற வேதிப்பொருளால் உறையிடப்பட்டு
செயற்கை விதைகள் உருவாக்கப்படுகிறது. இவ்விதைகள்
4 முதல் 6 மி.மீ விட்டம் அளவு கொண்டது.
வேதிப்பொருள் மூலம் உறையிடப்பட்ட
செயற்கை விதைகளை நேரிடையாகவோ அல்லது
தண்ணீரில் கலந்தோ நிலத்தில் பயிரிடலாம்.
இந்த முறையில் உருவாக்கிய விதைகளை குறைந்த வெப்பநிலையில்
குறைவான காலத்திற்கு மட்டுமே சேமித்து வைக்க
முடியும்.
2. உலர்த்திய விதைகள் (Desiccated seeds)
இம்முறையில் பாலி
ஆக்ஸி எத்திலின் கிளைக்கால் என்ற உறையிடும் பொருளினால்
செயற்கை விதைகள் உருவாக்கப்படுகிறது. உலர்த்தப்பட்ட
உடல கருவுருக்களை பாலிஆக்ஸி எத்திலின் கிளைக்கால் (PEG) உடன் கலந்து உடல கருவுருக்களுக்கு உறையிடப்படுகிறது.
இந்த உறையிடப்பட்ட விதைகளை சிறிது நேரம்
உலர வைக்கப்பட்டு செயற்கை விதைகள் உற்பத்தி
செய்யப்படுகிறது. இந்தமுறையினால் கருவுருக்கள் அதிகமாக சேதாரமடைவதற்கு வாய்ப்புள்ளதாக
கருதப்படுகிறது.
செயற்கை விதைகளை உருவாக்கும் வழிநிலைகள்
(Procedure for production of Synthetic seeds)
தாவர
வகைகளைப் பொறுத்து செயற்கை விதைகளை உற்பத்தி
செய்யும் வழிநிலைகள்/ தொழில் நுட்பம் வேறுபடுகிறது.
செயற்கை விதையின்
பயன்கள்:
வேளாண்மையில்
செயற்கை விதையானது பல வகையான பயன்பாடுகளை
கொண்டுள்ளது. ஆனால் செயற்கை விதையின்
பயன்பாடுகள் சிற்றினங்களுக்கிடையே வேறுபடுகிறது. செயற்கை விதை பொதுவாக
தன் மகரந்த சேர்க்கையுறும் தாவரங்களுக்கு
பயன்படுவதில்லை. ஆனால் அயல் மகரந்தச்
சேர்க்கையுறும் (Cross
pollinated) தாவரங்களில் இது பற்பல பயன்பாடுகளை
கொண்டுள்ளது. இதன் பல்வேறுவகையான பயன்களை
கீழே காண்போம்.
1.மலட்டுத்தன்மையுடைய
(Sterility) அல்லது விதையினால் உற்பத்தி செய்ய இயலாத பயிர்களை
அதிக அளவில் இனப்பெருக்கம்
செய்து பயிரிடுவதற்கு உதவுகிறது.
2.கலப்பின
விதைகளை உருவாக்குவதற்கு செயற்கைவிதையில் மிகப்பெரிய வாய்ப்புள்ளது. (உ.தா) மகர்ந்தச்சேர்க்கையுறாத
(அல்ஃபால்பா), பூ ஒட்டிக்கொள்ளுதல் (பருத்தி),
மகரந்த முன்முதிர்வு (சோயாபீன்ஸ்), ஆண் மலட்டுத்தன்மை (தக்காளி
& தர்பூசனி) போன்ற தாவரங்களில் கலப்பின
விதைகள் உருவாக்குவது கடினம். ஆனால் செயற்கை
விதை முறையைப் பயன்படுத்தி மேற்கூறிய பயிர்களில் கலப்பின விதைகளை உருவாக்க
முடியும்.
3.செயற்கை
விதைகள் தூயதன்மை (Purity) உடையது.
4.மரபியல்படி
வேறுபாடுடைய தாவரங்களை (Genetically
heterozygous plants) செயற்கை
விதைகள் மூலமாக சேமித்துவைக்க முடியும்.
5. கடின
விதைகள் (Recalcitrant
seeds) வகைகளையும் செயற்கை விதை முறையில்
உற்பத்தி செய்யலாம்.
6.குறைவான
காலத்தில் புதிய வகை செயற்கைவிதைகளை
அதிக அளவில் உற்பத்தி செய்ய
இயலும்.
7.செயற்கை
விதைகளை வருடத்தின் எந்த நேரத்திலும், எந்த
பருவத்திலும் உற்பத்தி செய்ய முடியும்.
8. மரபுத்தன்மையை
பாதுகாக்க செயற்கை விதைகள் பயன்படுகிறது.
9.செயற்கை
விதைகளின் விலை கலப்பின விதைகளைவிட குறைவு.
10.கலப்பின
முறையின் மூலமாக கிடைத்த தாவரத்தை
பெருக்குவதற்கும் செயற்கை விதை உதவுகிறது.
வியபார ரீதியாக
செயற்கை
விதை
உருவாக்குவதில்
ஏற்படும்
பிரச்சினைகள்
1.செயற்கை
விதைகளை அதிக அளவில் உற்பத்தி
செய்வதற்கு தரமான உடல கருவுருக்கள்
தேவைப்படுகிறது. ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில்
உடல கருவுருக்கள் அதிக அளவில் கிடைப்பது
அரிதாக உள்ளது.
2.ஊட்டச்சத்துகள்
மற்றும் ஆக்ஸிஜன் குறைபாட்டினால் செயற்கை விதைகளின் முளைப்புத்திறன்
குறைகிறது.
3.செயற்கை
விதைகள் திசுவளர்ப்பு முறையில் வளர்க்கப்படுவதால் உடலச்செல் வளர்ப்பில் வேறுபாடுகள் (Somaclonal variation)
காணப்படுகிறது.