Wednesday, June 22, 2011
மாற வேண்டும்…
நாளேடுகளில் இராசி பலன்
பார்த்து வேலை செய்வதை தவிர்க்க வேண்டும்.
இந்தியாவில்
ஊழல் அறவே ஒழிந்திட வேண்டும்.
படித்தவர்களே அரசியலுக்கு
வர வேண்டும்.
மொல்லமாரிகளையெல்லாம் சாமியாராக்கி
அவன் பாதம் தொட்டு வணங்குவதை நிறுத்த வேண்டும்.
பண்பாட்டினை சிதைக்கும் படங்களை
பார்ப்பதை நிறுத்த வேண்டும்.
தொல்லைதரும் தொலைக்காட்சி தொடர்களை
பார்ப்பதை நிறுத்த வேண்டும்.
இளைஞர்கள், நடிகர்களை தலையில்
தூக்கிவைத்தாடுவதை நிறுத்த வேண்டும்.
கோடிகோடியாய் கொல்லையடிக்கும் அரசியல்வாதிக்கு
கொடிபிடிப்பதை நிறுத்த வேண்டும்.
பெண்கள் இரவு சமாச்சாரத்திற்கு மட்டும்தான்
எனும் ஆணாதிக்கம் ஓழிய வேண்டும்.
தமிழ் மொழியினை அழிந்திடாமல்
காத்திட வேண்டும்.
தமிழனுக்கென்றொரு நாடு புதிதாய்
உதித்திட வேண்டும்.
மறந்து போன மனித நேயம்
கிராமத்தில்...
கிழக்கு தெருவில் ஒருவன்
மரமேறி தவறி கீழே விழுந்துவிட்டால்
அடுத்த தெருவிலிருந்து
அலரியடித்து ஓடிவந்து மருத்தவமனைக்கு
அவனை அழைத்து
சென்றதைக் கண்டு வியந்ததில்லை.
விசக் காய்ச்சலில்
படுத்தவனை அண்டை வீட்டாரும்,
முகம் தெரியாத மனிதர்களும்
நலம் விசாரித்து
சென்றதைக் கண்டு வியந்ததில்லை!
நகரத்தில்...
இரு சக்கர வாகனத்தில்
சென்றவனை பேருந்து இடித்து செல்ல
கீழே விழுந்தவனுக்கு
குருதி ஆறாய் பெருக்கெடுத்தோடி
உயிர் ஊசலாட கிடப்பவனை
அருகில் வந்து கூட பார்க்க ஆளில்லை
என்பதை கண்டு வியந்தேன்
அவசர உலகத்திலிருக்கும்
நகர மக்களுக்கு
மனிதநேயம் மறந்து போனதென்று..!
தமிழ் மாந்தரெல்லாம்...
பொதிகையில் பிறந்தவளே
மதுரையில் வளர்ந்தவளே
ஐம்பெருங்காப்பியங்கள் படைத்தவளே
திருவாசகமும் இராமாயணமும் கண்டவளே
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை
கலிங்கத்துப்பரணிக்கு சொந்தமானவளே
இயல் இசை நாடக முத்தமிழே
திராவிட மொழிகளின் தாயே
தாய்மொழியாம் தமிழ் மொழியே
தமிழனின் அடையாளமே
உன்னை...
திரைப்பட உரையாடல்
தெருக்கடைகளின் பெயர்கள்
கல்விக்கூடங்களில்
நாகரிக மோகத்தால்
ஆங்கில மொழியை
தமிழ் மொழியுடன் கலந்து பேசி
தமிழ் மொழியை மெல்ல சாகாடிக்குறோமே...
நாமெல்லாம் தமிழர்தானா...?
செம்மொழிக்கேன் இந்நிலை?
தமிழர்களே...
நீங்கள் மும்முறை தமிழ்
எனும் வார்த்தையை உச்சரித்து பாருங்கள்,
உங்கள் உமிழ் நீரும்
ஊற்றெடுக்க தொடங்கும்!
ஆனால்...?
இத்தகைய தாய் (தமிழ்) மொழியை
தூய தமிழில்
நாம் பேச தயங்குவதேன்?
நாகரீகமென்று நினைத்து
ஆங்கிலம் கலந்த தமிழை பேசி
தமிழை (தாயை) கொல்கிறோம்!
எத்தாயாவது தன் குழந்தைக்கு
விசம் கலந்த பாலினை கொடுப்பாளா?
ஆம், இங்கே கொடுக்கிறாள்
தாய் முதலில் குழந்தைக்கு
சொல்லித்தர வேண்டிய வார்த்தை
அம்மா, அப்பாயென்று…
ஆனால்...இங்கே சொல்லிதருவதோ
மம்மி, டாடியென்று…
ஆங்கிலமெனும் விசப் பாலினை ஊட்டி
மகிழ்ச்சியும் அடைகிறார்கள்
இன்றைய பெற்றோர்கள்.
அயல் மொழியை கற்பது தவறில்லை
ஆனால்..
அன்னை மொழியிலேயே பேசிட வேண்டும்.
பழமையான, தொன்மையான
செம்மொழியே...
உந்தன் மகத்துவத்தினை
என்றறிவார்கள்
இந்த தமிழர்கள்?
எப்போதழியும் ஆங்கில மோகம்?
எப்போதழைக்கும் தமிழ் தாகம்?
செம்மொழிச் செந்தமிழ்
உலக மொழிகள் மூவாயிரம்
அதனில் முதற்மொழியாகிய தமிழ்மொழியே!
குமரிக்கண்டத்தில் பிறந்த
செம்மொழிச் செந்தமிழே!
தமிழர்கள்தாம் உலகிற் தோன்றிய மாந்தர்கள்
என்பதினை உலகினிற்கறிய வைத்த செம்மொழியே!
உலகமொழிகளில் இயன்மொழிக்கென்று
பதினாறு பண்புகளை கொண்டிருக்கும்
செம்மொழிச் செந்தமிழே!
திராவிட மொழிகட்கெல்லாம்
தாய்மொழியாம் தமிழ்மொழியே!
இயல், இசை, நாடகத் தமிழெனும்
இலக்கிய முத்தமிழே!
ஆரிய மொழிகளின் ஆதிக்கத்திலிருந்து
சீரழியாது வந்த பைந்தமிழே!
உனக்குப்பின் தோன்றிய மொழிகளெல்லாம்
அழிந்துவரும் நிலையில்
நீ மட்டும் உலகளவில் வளர்ந்துவரும் செந்தமிழே!
முச்சங்கங்கள் வைத்து வளர்க்கப்பட்ட
தாய் மொழியாம் தமிழ் மொழியே!
உந்தன் மகத்துவத்தினால் உலக மக்களை வியக்க வைத்த
செம்மொழிச் செந்தமிழே! நீ வாழி!
சரித்திரம் படைப்போமா?
கடலில் அலைகள்
அமைதி கன்டதாய்
சரித்திரம் இல்லை.
தென்றலாய் வீசும்
காற்று நின்றதாய்
சரித்திரம் இல்லை.
தேனுக்காக மலர்களை
தேடிச்சென்ற தேனீக்கள் தோற்றதாய்
சரித்திரம் இல்லை.
ஆனால்...
இளைஞர்களே நாம் மட்டும்
உறக்கத்தில் உள்ளோம்,
நாம் விழித்தெழுவது எப்போது?
2020-ல் இந்தியா
அனைத்து துறைகளிலும் தன்னிறைவடைந்து
வல்லரசு நாடாகுமென்று கலாம் சொல்லியது
இன்றைய இளைஞர்களின்
மீது வைத்திருந்த நம்பிக்கையில்!
கலாமின் கனவை
நாம்நினைவாக்குவது எப்போது?
இளைஞர்களே...
விழித்தெழுங்கள்
2020-ம் ஆண்டினுள்
நாம் புது சரித்திரம் படைத்து
கலாம் கனவை நிறைவேற்றுவோம்
இளைஞர்களே...
சரித்திரம் படைக்க வாருங்கள்...
Tuesday, June 21, 2011
அன்புள்ள அக்கா…
நான் சிறுவனாக
இருந்த போது
இருந்த போது
என்னோடு சேர்ந்து விளையாடிய
முதல் தோழி.
சிறு வயதில் என்னோடு சேர்ந்து
மணற் வீடு கட்டியவள்.
சிறு வயதில் நம்மிடையே நடந்த சண்டையில்
நீ என்னை அடித்தாலும்
அழாதடா தம்பி
இனி உன்னை அடிக்கமாட்டேனென்று
ஆறுதல் கூறுபவள்.
அம்மா முந்திரி காட்டிற்கு சென்ற சமயங்களில்
எனக்கு சோற்றினை உருண்டை பிடித்து ஊட்டியவள்.
பள்ளி செல்கையில்,
உன்னோடு என்னையும் கைப்பிடித்து
பள்ளிக்கு அழைத்து சென்றவள்.
கல்லூரி பயில்கையில்
நான் ஊருக்கு வந்தால்
ஐம்பது மைல் தொலைவிலிருந்தும்
என்னை பார்க்க ஊருக்கு வருபவள்.
நான் கல்லூரியிலிருந்து
தொலைபேசியில் உன்னை அழைக்கும் போது
நீ கேட்கும் முதல் வார்த்தை
தம்பி நல்லாயிருக்கியா? யென்று...
இது போன்று,
இன்னும் எத்தனை பாசங்களை
என் மீது காட்டப்போகிறாய்?
அந்த நாட்களுக்காக காத்திருக்கிறேன்
இனி வரும் காலங்களில்...
தாய்யெனும் தெய்வம்
கருவிலிருந்து
ஈரைந்து மாதம் சுமந்து
என்னை ஈன்றவள்.
குழந்தையாய் இருக்கையில்
பேருந்து பயணத்திலும்
மார்போடு அணைத்து
எனக்கு பாலூட்டியவள்.
வயலுக்கு செல்கையில்
தலையில் சோற்றுக்குவளையுடன்
இடுப்பில் என்னையும்
சுமந்து சென்றவள்.
பள்ளி செல்கையில்
நான் செய்த தவறுகளுக்காக
அப்பாவிடம் அடிவாங்காமல்
என்னை காப்பாற்றி அடிவாங்குபவள்.
கல்லூரி பயில்கையில்
வீட்டிலிருந்து கல்லூரிக்கு
கிளம்பும்போது
அப்பாவுக்கு தெரியாமல்
செலவுக்கு பணம் கொடுத்தனுப்புபவள்.
நான் கல்லூரியிலிருந்து
தொலைபேசியில் உன்னிடம் பேசுகையில்
நீ முதலில் என்னிடம் கேட்பது
நீ எப்ப ஊருக்கு வருவாய்யென்பவள்.
விடுமுறை முடித்து
நான் கல்லூரிக்கு கிளம்பும்போது
பேருந்து நிருத்தம் வரை வந்து
பேருந்தினுள் ஏற்றி விட்டு
வழியனுப்பி செல்பவள்.
எனக்கு வயது இருபத்தைந்து
ஆனபோதிலும்
என்னை உன் கூடவே
படுத்துறங்க சொல்பவள்.
எவரிடமும் கிடைப்பதில்லை
இத்தனை பாசங்களும்
தாய் எனும் தெய்வத்தை தவிர...
Subscribe to:
Posts (Atom)
நிலக்கடலையும் அதன் பயன்களும்
முனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...

-
அறிமுகம்: இந்தியாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப உணவுப் பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்து அத்தியாவசிய உணவுப்பொருள்...
-
அறிமுகம் கிமு. 3000-4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, பண்டைய மெசபடோமியன்கள் முளைத்த தானியங்களை உலரவைத்து (மால்டிங் மூலமாக) மென் மது...
-
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப நாம் நமக்கு தேவையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய...