Tuesday, July 5, 2011

மாயவரம் சந்தையிலே

மாட்டு வண்டி பூட்டிகிட்டு 
மாயவரம் சந்தைக்குதான்
மாம்பழம் விற்க போறேன்டி
மச்சினிச்சி நீயும்  கொஞ்சம் ஒத்தாசைக்கு வாயேன்டி (ஆண்)

சந்தைக்கு நீ வந்தீனா
தலை நிறய மல்லிப்பூவ
மாமன் காரன் வாங்கிதான் வெச்சுடுவேன்
கை நிறய வலையலதான் வலிக்காம போட்டுவேன்.  (ஆண்)

சந்தைக்கு நான் வந்தேன்னா
இராத்திரிக்கு கூப்பிடுவே
சரிபட்டு வராது சஞ்சலமும் கூடாது மாமன்காரா
அதுக்கு வேறாள பாரு என் மாமன்காரா             (பெண்)

மாட்டு வண்டி பூட்டிகிட்டு
மாயவரம் சந்தைக்குதான்
மாமன்காரன் போறேன்டி
மச்சினிச்சி யாரவது ஒத்தாசைக்கு வாங்களேன்டி!    (ஆண்)

No comments:

Post a Comment

நிலக்கடலையும் அதன் பயன்களும்

முனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...