Friday, July 22, 2011

தமிழருடன் வரலாற்று தொடர்புடைய சோற்றுக்கற்றாழையும் அதன் பயன்களும்

அறிமுகம்:
பண்டை காலத்திலிருந்தே சோற்றுக்கற்றாழைக்கும் தமிழனுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.  அதாவது என்னவென்றால், தமிழ் மொழி முதன் முதலில் பேசிய பகுதியை  குமரிக்கண்டம் என்று அழைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் பழங்காலத்தில் குமரி என்பது ஒரு மூலிகை செடி, இச்செடியினை சோற்றுக் கற்றாழை என நம் தமிழர்கள் அழைத்தனர். மேலும் தமிழர்கள் வாழ்ந்த இடங்களில் (குமரிச் செடிகள்) சோற்றுக்கற்றாழை மிகுந்து இருந்த காரணத்தினால் தமிழர்கள் வாழ்ந்த பாகுதிகளானது குமரிக்கண்டம் என்றழைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சோற்றுக்கற்றாழையானது சுமார்  மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மூலிகை செடியாக பயன்படுத்தி உள்ளதை  நம்மால் அறிய முடிகிறது.

சோற்றுக்கற்றாழையில் பல்வேறு வகையான சிற்றினங்கள் உள்ளது. அவற்றில், அலோ வீரா ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்டு கிரிஸ், இத்தாலி, வெனிசுலா மற்றும் தென்னாப்பிரிக்காவில் பயிரிடப் படுகிறது. அலோ பார்படேன்ஸிஸ் என்ற சோற்றுக் கற்றாழை வகை இந்தியாவில் ராஜஸ்தான், ஆந்திரா மற்றும் குஜராத் மாநிலங்களிலும், தமிழ்நாட்டில்  சேலம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களிலும் பயிரிடப்படுகிறது. மேலும் இந்த சோற்றுக்கற்றாழையானது மலையாலத்தில் கட்டவாலா மற்றும் தெலுங்கில் சின்ன கலபன்டா என்றும் அழைக்கப்படுகிறது.

வேதிப்பொருள்கள்:
அலாய்ன் எனும் வேதிப்பொருளானது அலோ வீரா-வில் 50 சதவிகிதமும், அலோ பெரி-யில் 25 முதல் 28 சதவிகிதமும், அலோ பெராக்ஸ்-ல் 10 சதவிகிதமும் உள்ளது. இத்தகைய அலாய்ன் எனும் வேதிப்பொருளில்தான்  பார்பலின், பென்டோசைட்ஸ், ரெசின் மற்றும் சப்போனின் போன்றவை உள்ளடங்கியுள்ளது. இத்துடன் சோற்றுக்கற்றாழையின் சாற்றில் நிறமேற்றிகளான (Dyes) ஆந்த்ரோகுயினோன் மற்றும் குயினோன்கள் உள்ளது. சோற்றுக்கற்றாழை இலைகளின் களி (Gel) யிலிருந்து பெறப்படும் திரவ பானத்தில் கால்சியம், குளோரின்,  சோடியம், பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் உள்ளன.  மேலும் அலோ களி (Gel) யில் வைட்டமின் ஏ, பி1, பி2, பாலிசாக்கரைடுகள் மற்றும் யூரிக் அமிலம் போன்றவகைகளும் உள்ளது.

பயன்களையும் பார்ப்போமே..
1.சோற்றுக்கற்றாழையில் உள்ள மருத்துவப் பொருள்கள் கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுபொருள்களை நீக்கி புதிய செல்களின் வளர்ச்சிக்கு வழிவகை செய்கிறது.
2.மது அருந்துவதன் மூலம் உடலில் தங்கும் ஆல்கஹாலை ஆக்ஸிஜனேற்றம் செய்து வெளியேற்ற சோற்று கற்றாழை மூலிகை பொருளாக பயன்படுகிறது.
3.இவ்மூலிகைப் பயிரின் இலைகளில் வழவழப்பாக உள்ள களியை (gel) தினமும் 2-3 சிறு துண்டுகளாக வெட்டி சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று ஆராய்ச்சி முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.
4.மனிதர்களுக்கு காமா மற்றும் புறஊதா கதிர்கள் மூலம் உன்டாகும் தோல் சம்மந்தமான நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
5. உடலில் ஏற்படும் வெட்டுக் காயங்களை குணப்படுத்தவும், அதன் தழும்புகளை நீக்கவும்  பயன்படுகிறது.
6.சோற்றுக்கற்றாழையிலிருந்து பெறப்படும் திரவ பானங்கள் சுவாச நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
7. இலையின் சாறு (Juice) வயிற்றுப் புண் நோயை குணப்படுத் உதவுகிறது.
குறிப்பு: இந்த கட்டூரையில் உள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறுவகையான ஆராய்ச்சி கட்டூரைகளில் இருந்து குறிப்பெடுத்து தமிழாக்கம் செய்து தொகுத்து வழங்கி உள்ளேன். சோற்றுக் கற்றாழையை பயன்படுத்துவதாக இருந்தால்  தகுந்த மருத்துவரை ஆலோசித்து பின்பு பயன்படுத்துங்கள்.  நன்றி.

அறிவியல் வழியே தமிழ் மொழி வளர்ப்போம்! தாய்மொழியை அழிவிலிருந்து மீட்போம்!


7 comments:

  1. தங்கள் எழுதியது அனைத்தும் உண்மையே

    ReplyDelete
  2. உங்களுடைய கருத்து மற்றும் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. Nice posting Mr.Ashok. Thanks for sharing. I remember when I was college kid in 90's watching one day early morning on SUN TV, Mr.Valampuri John was giving talking about this plant and explain all good things brings to our life. At the end he mentioned this plant is used in Western Countries at face cream, hand sanitizer and everything as Skin product. Now living in USA last 12 years, We see every product with ALOE VERA !!! Really lot of good home medicine and Patty medicine have lot of significance, which was not to next generation in India (or) it was not patented properly.

    ReplyDelete
    Replies
    1. Yes You are wright. Thank u, I am in Canada.

      Delete
  4. உங்களுடைய கருத்து மற்றும் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  5. naam thamilar samaran BALAAugust 2, 2012 at 10:39 AM

    அற்புதம் - தமிழா, உன் தொண்டு சிறக்கட்டும்
    வாழ்க வளர்க - இன்னும் நிறைய எழுதுக

    ReplyDelete
    Replies
    1. ஊக்கத்திற்கு நன்றி நண்பரே...

      Delete

நிலக்கடலையும் அதன் பயன்களும்

முனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...