சோளப் பயிர் ஆப்பிரிக்காவை பிறப்பிடமாக கொண்ட ஒரு புல் வகையை சேர்ந்த தாவரம் ஆகும். இப்பயிரானது, இந்தியா மற்றும் உலக நாடுகளில் தானியம் மற்றும் தீவனத்திற்காக பயிரிடப்பட்டு வருகிறது. சோள தானியமானது பல்வேறு நாடுகளில் சுமார் 300 மில்லியன் மக்களின் உணவில் முக்கிய பங்குவகிக்கிறது. இத்தகைய சோளத்திலிருந்து லிக்னோசெல்லுலோயிக் சார்ந்த உயிரி எரிபொருள் (Biofuel) கிடைக்கிறது என்று ஆய்வுகள் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது.
சமீபத்தில் டெக்ஸாஸ் அக்ரிலைஃப் (Texas AgriLife) நிறுவனத்தின் ஆய்வுக்குழுவினால் சோளத்தில் பூ பூப்பதை ஒழுங்குபடுத்தும் மரபணு கண்டறியப்பட்டது. பூ பூப்பதிற்கு காரணமான மரபணுவின் செயல்பாட்டை கட்டு படுத்தி எரிபொருளுக்கு பயன்படுத்தும் பயிர்களில் பூ பூப்பதை தடுப்பதினால் மூன்று மடங்கு அதிக உயிரி எரிசக்தி (Bioenergy) கிடைக்கிறது என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சியில் சடுதி மாற்றத்திற்கு (mutation) உட்படுத்திய சில சோள ஜீனோடைப்களில் பூ பூப்பதற்கு காரணமான மரபணு (எம்ஏ 4-1) செயலிழந்துள்ளதன் மூலம் பூ பூத்தல் தாமதமடைகிறது என கண்டறிந்துள்ளனர். இந்த மரபணு இதற்கு முன்பு இதே நிறுவனத்தினால் கண்டுபிடுத்துள்ள எம்ஏ 1 (Ma 1) மரபணுவை விட செயல்பாட்டில் மாறுபட்டுள்ளது எனவும் கண்டறிந்துள்ளனர்.
சாதாரணமாக தானிய சோளமானது(Grain sorghum) 60 நாட்களில் பூ பூத்துவிடும். ஆனால் இந்த பூ பூப்பதற்கு காரணமான மரபணுவை கட்டுபடுத்திய எரிசக்திக்கு பயன்படுத்த கூடிய சோளத்தில் 200 நாட்கள் வரை பூ பூப்பது தாமதமாகிறது. இதனால் மூன்று மடங்கு அதிக உயிரி எரிசக்தி கிடைக்கிறது. இதனால் தற்போது தானிய சோளம் மற்றும் தீவன சோளத்திற்கென்று தனித்தனியே இரகங்கள் உள்ளது போன்று எரிசக்திக்கென்று வெளியிடும் இரகங்களால் இனிவரும் காலங்களில் சோளம் உணவு மற்றும் தீவனத்திற்கு என்றில்லாமல் உயிரி எரிபொருள் பெறுவதிலும் மிக முக்கிய பக்குவகிக்க போகிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை.
அருமையான பதிவு
ReplyDeleteநன்றி
எப்படியோ அனைத்து வயல்களும் இனி பெட்ரோல் விலை விக்க போகிறது..
ReplyDeleteஅருமையான பதிவு முனைவரே...
ReplyDeleteகருத்து வழங்கியதற்கு மிக்க நன்றி நண்பர்களே..
ReplyDelete