Monday, October 24, 2011

சிவப்பு ஒயினில் உள்ள ரெஸ்வெராட்ரால் மார்பக புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கிறது


ரெஸ்வெராட்ரால் (Resveratrol) என்பது சிவப்பு ஒயினில் உள்ள "ஆரோக்கியமான" மூலப்பொருள் ஆகும். இது, ஈஸ்ட்ரோஜன் வளர்ச்சியை தடுப்பதன் மூலம் மார்பக புற்றுநோய் செல்கள்  வளர்ச்சியை தடுத்து நிறுத்துகிறது என்று சமீபத்திய ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.

இந்த ஆராய்ச்சியை இத்தாலியில் உள்ள காலப்ரியா பல்கலைக்கழகம் (University of Calabria) மற்றும் அமெரிக்காவில் உள்ள பேய்லர் மருத்துவ கல்லூரியும் (Baylor College of Medicine) இணைந்து செய்துள்ளது. இந்த ஆராய்ச்சியில் ரெஸ்வெராட்ட லானது  ஹார்மோன் எதிர்ப்பு மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது என்று  முதல் முறையாக விஞ்ஞானிகள்  கூறுகின்றனர்.

இந்த ஆராய்ச்சி செய்வதற்கு, ரெஸ்வெராட்ராலின் விளைவுகள் எப்படி உள்ளது என்பதை சோதிக்க ஈஸ்ட்ரோஜன் மார்பகபுற்றுநோய் செல் வரிசைகள் (Cell lines) பயன்படுத்தப்பட்டது. பின்பு ஆராய்ச்சியாளர்கள் ரெஸ்வெராட்டல் சிகிச்சையளித்த செல் வரிசை மற்றும் ரெஸ்வெராட்டல் சிகிச்சையளிக்காத செல் வரிசைகளில் புற்று நோயிற்கு காரணமான செல்வளர்ச்சி எவ்வாறு உள்ளது என் ஒப்பிட்டு பார்த்தனர். சிகிச்சை அளிக்கப்படாத(untreated) செல்களில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால் ரெஸ்வெராட்டல் சிகிச்சையளித்த(treated) செல் வரிசையில் புற்றுநோய்க்கு காரணமான செல்களின் வளர்ச்சி குறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வருங்காலத்தில் மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதில் ரெஸ்வெராட்ரால் ஒரு சாத்தியமான மருந்தியல் தீர்வாகும் என்றால் அது மிகையாகாது.

ஒயின்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமெனில் என்னுடைய முந்தைய பதிவின்  இணைப்பை பார்க்கவும்.
http://ashokkumarkn.blogspot.com/2011/09/blog-post.html

நன்றி :  The FASEB Journal, October 2011.
குறிப்பு: இந்த பதிவு சமீபத்திய‌ ஆய்வுமுடிவே தவிர ஒயின் அருந்த ஊக்கப்படுத்தும் பதிவல்ல. மேலும் மார்பக புற்று நோயை குணப்படுத்த தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.

9 comments:

  1. what is the dosage of Resveratrol needed to prevent breast cancer?

    ReplyDelete
  2. what is your opinion about this?
    http://www.quackwatch.org/01QuackeryRelatedTopics/DSH/resveratrol.html

    ReplyDelete
  3. இந்த மருந்தை குறித்து ஆய்வு மிகவும் ஆரம்ப கட்ட நிலையிலேயே இருப்பதால், இதை பற்றிய கருத்தை சொல்வது ஆபத்தானதாக இருக்கும் என்பது என் எண்ணம்... மாற்று கருத்து எனக்கு உள்ளது ...

    ReplyDelete
  4. கருத்துக்கு மிக்க நன்றி.

    ரெஸ்வெராட்ரால் (Resveratrol) என்பது பொதுவாக நோய் எதிர்ப்பினை தரக்கூடியது. அதாவது இதை ஆங்கிலத்தில் Antioxidant என்று அழைக்கப்படுகிறது.இது நுரையீரல் புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது என்று முன்பே ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை (growth)குறைக்கிறது என்று கண்டறிந்துள்ளனர். வருங்காலத்தில் இந்நோயை முழுமையாக குணப்படுத்துவதற்கு குறுகிய காலத்தில் தீர்வு காணப்படும் என நம்புகிறேன்.

    ReplyDelete
  5. பதிலுக்கு நன்றி... நானும் அதையே எதிர்பார்க்கிறேன்...

    ReplyDelete
  6. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் முனைவரே.

    ReplyDelete
  7. நல்ல தகவல் நண்பரே...

    ReplyDelete
  8. பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி சகோ .......

    ReplyDelete
  9. “அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
    வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete

நிலக்கடலையும் அதன் பயன்களும்

முனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...