அடிக்கடி ஏற்படும் வறட்சி மற்றும் கடுமையான வறட்சியின் காரணமாக
நிலத்தடி நீரானது மிக வேகமாக கீழிறங்குதல் மற்றும் நீரூற்றுகள் வற்றி பாலைவன சுற்றுச்
சூழலுக்கு தள்ளப்படுவதால் பல அரிய வகை உயிரினங்களை அழிவிலிருந்து மீட்க முடியாது என
ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. இந்த ஆராய்ச்சியை அமெரிக்காவில் உள்ள ஒரேகான் மாநில
பல்கலைக்கழகம் (Oregon State University) கடந்த எட்டு வருடமாக ஆய்வு செய்துள்ளது.
காலநிலை மாற்றம் (Climate change) மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தினால்
மனித பயன்பாட்டிற்கு நிலத்திலிருந்து அதிக அளவில் தண்ணீரை எடுத்து உபயோக படுத்துதலினாலும் நிலத்தில் வாழும்
உயிரினங்களின் வாழ்நிலை பாதிக்கிறது. மேலும் பல ஆண்டுகள் தொடர்ச்சியாக கடுமையான வறட்சியால்
பாதிக்கப்பட்ட நிலத்தில் பல்வேறு வகையான அரிய தாவர இனங்கள், பூச்சி இனங்கள் அடியோடு
அழிந்து விடுவதாக கூறப்படுகிறது.
நச் பதிவு... அருமை
ReplyDeleteகருத்து கூறி ஊக்கமளித்த உங்களுக்கு நன்றிகள்.
ReplyDelete