தாவரங்களுக்கு கண்கள் மற்றும் கால்கள் இல்லை என்பது நாமறிந்ததே,
ஆனால், வெளிச்சம் இல்லாத இடத்தில் வளரும் தாவரங்கள் ஒளியை பார்க்க ஒளியை நோக்கி வளரும்
(அ) நகரும் இதையே ஒளியை நோக்கி வளர்தல் (Phototropism) என்று அழைக்கப்படுகிறது. தாவரங்கள் ஒளியை நோக்கி வளர்வதற்கு தாவர செல்கள்
மற்றும் புரதங்களுக்கு இடையே மூலக்கூறுகளின் சமிக்ஞைகள்(signals) தான் காரணமென்று ஆய்வுகளில்
கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தாவரங்கள் ஒளியை நோக்கி வளரும் போது அதன் செல்கள் நீட்சி
(Cell elongation) அடைகிறது என்றும் கூறப்படுகிறது.
தாவரங்கள் வளர்வது ஒளி வரும் திசையை சார்ந்து உள்ளது. இதற்கு
ஒளியை உணரும் புரதங்களான phototropin1 (PHOT1) மற்றும் phototropin2 (PHOT2)
காரணமாக உள்ளது. இந்த புரதங்கள் ஒளி வாங்கிகள் (photoreceptors) போன்று செயல்படுகிறது.
அதாவது இந்த புரதங்கள் சூரியன் வெளியிடுகிற புறஊதாக் கதிர்களிலுள்ள நீல ஒளியை (Blue
light) உள்வாங்கிக்கொள்கிறது. இவ்விரு புரதங்களோடு Non-Phototropic Hypocotyl3 (NPH3) என்ற மூன்றாவது புரதம் இணைந்து தாவரங்கள் ஒளியை நோக்கி வளர்வதற்கு சமிக்ஞை (signal) தருகிறது. இது சார்ந்த ஆராய்ச்சிகளை
அராபிடோப்சிஸ் தாவரத்தில் மிசோரி பல்கலைக்கழக (University of Missouri) விஞ்ஞானிகள்
மேற்கொண்டுள்ளனர்.
தாவரங்கள் எப்படி வளர்கிறது என்பதை மிக தெளிவாக விளக்கியமைக்கு மிக்க நன்றி நண்பரே.
ReplyDeleteகருத்து எழுதி வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி நண்பரே...
ReplyDeleteஅறிவியல் எழுத ஆட்கள் குறைவு. நன்றாகவே எழுதியுள்ளீர். வாழ்த்துக்கள். தொடருங்கள்.
ReplyDeleteஅடுத்த பதிவு hydrotropism தானா
ReplyDeleteகருத்து கூறி ஊக்கமளித்த உங்களுக்கு நன்றிகள்.
ReplyDeleteTropism பற்றி ஒரு கட்டுரையை கண்டிப்பாக எழுதுவேன்.
ReplyDelete